விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய கமல்ஹாசன்..!

“விஜய் கால்ஷீட் கொடுத்தால் அவரை வைத்து படம் தயாரிப்பேன்” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படம் வரும் ஜூன்-3-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வரிசையில்  மலேசியா சென்றார் நடிகர் கமல்ஹாசன். அங்கே விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்போது அந்த மேடையில் “விஜய்யை வைத்து எப்போ படம் பண்ணுவீங்க..? ‘தளபதி’ உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கா…?” என்ற கேள்வி கமலிடம் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் “தளபதி அய்யா கால்ஷீட் கொடுத்தால் நிச்சயம் அவருடன் இணைந்து படம் பண்ண தயார்” என்று தெரிவித்தார்.
விஜய்யின் ரசிகர்கள் அவரை அன்போடு அழைக்கும் ‘தளபதி’ என்கிற அடை மொழியுடன் ‘அய்யா’வையும் சேர்த்து கமல் இப்படி பேசியுள்ளதால், விஜய் ரசிகர்கள் இதைப் பாராட்டி வருகின்றனர்.
தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்தின் மூலமாக புதிய படங்களை தயாரிக்க நடிகர் கமல்ஹாசன் தற்போது பெரிதும் முனைப்பு காட்டி வருகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தை தயாரிக்கவுள்ள கமல் அடுத்ததாக சூர்யாவின் படத்தை தயாரிக்க உள்ளார்.மேலும், நடிகர் விஜய்யை தனது தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க வைக்க கமல்ஹாசன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது.