ரஜினிகாந்தை சந்தித்த கமல்ஹாசன்

கமலஹாசன் நடிப்பில் 2015, சூலை 3 அன்று பாபநாசம் திரைப்படம் வெளியானது மலையாளத்தில் த்ரிஷியம் என்கிற பெயரில் மோகன்லால்- மீனா நடித்த இப்படம் சூப்பர்ஹிட்டடித்தது அதன் தமிழ் பதிப்பில் கமல்ஹாசன் – கௌதமி நடித்து வெளியான பாபநாசம் வணிகரீதியாக வெற்றிப்படமே. அதன் பின் கமல்ஹாசன் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை அதனால் சூன் 3 அன்று கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரும் விக்ரம் படம் சர்வதேச அளவில் தமிழ் சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுஎனவே படத்திற்கான புரமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வருகிறார் கமல்ஹாசன் எல்லா மொழியிலும் உள்ள முன்னணி நடிகர்களையும் கமல்ஹாசன் சந்திக்க தொடங்கியுள்ளார் விக்ரம் படத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் தரைலோக்கல் அளவில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார் என்கின்றனர் விமான நிலையம் தொடங்கி மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் விக்ரம் படத்தின் விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளியான எந்தவொரு படத்திற்கும் இப்படி விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் விக்ரம் படக்குழுவினர் ரஜினிகாந்தை சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது  முன்னதாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் சார் மற்றும் ரஜினி சார் ஆகியோருக்கு நன்றி. என்ன ஒரு நட்பு. எங்களுக்கு உத்வேகமாக இருப்பதற்கு நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.