காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்ப்பேன்-அமீர்கான்

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் RRR இப்படம் வருகின்ற மார்ச் 25 அன்று வெளிவரவுள்ளது படத்தை விளம்பரப்படுத்தும் பணிக்காக உலகம் முழுவதும் ராஜமவுலி, கதாநாயகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் பயணம் செய்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகின்றனர் மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கெடுத்தஇந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அமீர்கானிடம் தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பியதற்கு கூறியதாவது

படத்தை அவசியம் அனைத்து இந்தியர்களும் தவறாமல் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நான் நிச்சயம் இந்த படத்தை பார்ப்பேன். இந்தக் கதை நமது வரலாற்றை பேசியுள்ள திரைப்படமாகும். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நடந்தது மிகவும் வருந்தத்தக்கது. இது மாதிரியான தலைப்புகளில் வெளி வருகின்ற படத்தை ஒவ்வொரு இந்தியரும் அவசியம் பார்க்க வேண்டும்.

மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் மனதையும் மிகவும் ஆழமாக தொட்டுள்ளது இந்த திரைப்படம். அதனால் நான் நிச்சயம் பார்ப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.