ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நடத்தப்படும் தகுதித்தேர்வில் கலந்துகொள்ள விளையாட்டுவீரர்கள் தேர்வு பெறுவது கௌரவமாக கருதப்படும் அதனால் அந்த விளையாட்டுவீரர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல உதவிகரமாயிருக்கும் அது போன்று தமிழ் சினிமாவில் மண்டேலா என்கிற படத்துக்கு கிடைத்திருக்கிறது கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டு சினிமா முடங்கியிருந்த நேரம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது மண்டேலா
தமிழ்நாட்டு அரசியலில் வாக்குக்கு பணம் கொடுப்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையக்கருவாக கொண்டு சமூக அவலங்களை விமர்சித்த திரைப்படம் மண்டேலா
படைப்புரீதியாக விமர்சகர்களால் பாரட்டப்பட்ட மண்டேலா திரைப்படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதற்கு முன்பு நடத்தப்படும் தேர்வு பட்டியலில் இடம்பிடித்து பெருமை சேர்த்திருக்கிறது