தோட்டாதரணி மீதுஅதிருப்தியில் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து நடைபெற்றது.இந்தப்படத்தில் கலை இயக்குநராக தோட்டாதரணி பணிபுரிகிறார். அரங்குகள் அமைக்க அதிகச்செலவு செய்வார் என்பதால் வடிவமைப்புகளை மட்டும் அவர் செய்து கொடுத்துவிடுவது என்றும் அரங்குகள் அமைக்கும் பணியை இளையராஜா செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டதாம்.இளையராஜா படக்குழு எதிர்பார்த்தபடி குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.பல நேரங்களில் மது அருந்திவிட்டு படப்பிடிப்புத் தளத்துக்கே போகமாட்டாராம்.
மணிரத்னத்தின் நம்பிக்கைக்குரிய உதவியாளர்தான் தோட்டாதரணியை நம்பாமல் இளையராஜாவைப் பணிபுரிய வைத்தாராம். இளையராஜா மது அருந்திவிட்டு வந்து சரியாகப் பணிபுரியாததால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இப்போது அரங்குகள் அமைக்கும் பணியும் தோட்டாதரணியிடமே கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அவரோ, ஏற்கெனவே படக்குழுவினர் வேண்டாமெனச் சொன்னவர்களையே திரும்ப அழைத்து வந்து வேலை செய்கிறாராம்.இதனால் அவர் மேல் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் மணிரத்னம். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேலைசெய்துகொண்டிருக்கிறார்களாம்