மார்ச் மாதம் தமிழ் சினிமாவில் வசூல் மந்தமாகவே இருக்கும் இருப்பினும் ஏற்கனவே தயாரித்துரிலீஸ் செய்ய முடியாமல்முடங்கிக் கிடக்கும் படங்கள்அதிகமாகரிலீஸ் செய்யப்படும்
மார்ச் மாதம் 31 நாட்களில் 26நேரடி தமிழ் படங்கள்ரிலீஸ் செய்யப்பட்டது இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களில்அருண் விஜய் நடித்த” தடம்”நீண்ட நாட்களுக்கு பின்னர் சேரன் இயக்கத்தில்”திருமணம்” நயன்தாரா நடித்த”ஐரா”விஜய் சேதுபதி நடித்த”சூப்பர் டீலக்ஸ்” ஓவியா நடித்த 90 ML பரத் நடித்த” பொட்டு”படைப்பு ரீதியாக விமர்சகர்களின் பாராட்டுபெற்ற
” நெடுநல்வாடை”இந்த படத்தை படத்தின் இயக்குனரின்நண்பர்கள் 50 பேர்முதலீட்டில்தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமைக்குரியது
தமிழ் சினிமாவில் நயன்தாரா நடித்தால்அந்தப் படம் வெற்றி பெற்று விடும் என்கிற மாயவலை அறம் படத்திற்கு பின்னர்பலமான நம்பிக்கையாக தயாரிப்பாளர் இயக்குனர்களிடம்இருந்து வந்ததை பொய்யாக்கிய படம் ஐராஒரு படத்தின் வெற்றி தோல்வி அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளைகொண்டு இல்லைஅப்படத்தின் உள்ளடக்கம் முக்கியம் என்பதை பாக்ஸ் ஆபிஸ் தோல்வி தமிழ் சினிமாவுக்கு உணர்த்தியது
தமிழ் சினிமாவிற்கு தனது படைப்புகள் மூலம் பெருமை சேர்த்தவர் இயக்குனர் சேரன்இவரது படைப்புகள்தமிழ் மக்களின் வாழ்வியலை சமரசம் இல்லாமல் பதிவு செய்த படங்களாகும்மனித ஊனத்தையும்
ஜாதி வெறியையும் அப்பட்டமாக தனது திரைப்படங்களில் தோலுரித்துக் காட்டியஇயக்குனர் சேரன் படங்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் பல வருடங்களுக்கு பின்னர் இயக்கிய படம் திருமணம்ஆடம்பர திருமணங்கள் அதன்மூலம் ஏற்படும் செலவுகளை முன்னேற்றத்திற்கான முதலீடுகள் ஆக மாற்றலாம் என்பதை கதை கருவாக கொண்டு உருவான திருமணம் இன்றைய நவீன சினிமாவில் நல்லதொரு
படமாக பேசப்பட்ட தோடு சரி வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை
பெண்களுக்கு தன்னம்பிக்கை வேண்டும் ஆணாதிக்கத்துக்கு எதிராக போராட வேண்டும் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு உருவான 90 MLஓவியா நடித்திருந்ததால்பரபரப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
படத்தின் மையக் கருவிலிருந்து இன்றைய நவீன சமூகத்தில்குறைந்த சதவீதத்தில்நடைபெறும் ஆண் பெண் அத்துமீறல் இவற்றை பிரதான படுத்தியதால் இந்த படம் ஒரு தரப்பு மட்டும் விரும்பக்கூடியதிரைப்படமானது வசூல் ரீதியாகஇந்தப் படம் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை வியாபார ரீதியாக
தயாரிப்பாளருக்கு பிறஉரிமைகளைவிற்பனை செய்ததன் மூலம் லாபகரமான படமாக அமைந்தது
தமிழ் சினிமாவின் தற்போதைய திரைக்கதை ஓட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டு தயாரிக்கப்பட்ட படம் சூப்பர் டீலக்ஸ் இந்த படத்தில்திருநங்கை வேடத்தில் குறிப்பிட்ட காட்சிகளில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்ததால்
ரசிகர்கள் மத்தியில்மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது திரையரங்குகளில் வசூல் ரீதியாக இந்தஎதிர்பார்ப்பு
வெற்றியை தரவில்லை
தமிழக பாக்ஸ் ஆபீஸில் இப்படம் வெற்றி பெறவில்லை ஆனால் பட விழாக்கள் இணையதள உரிமை தொலைக்காட்சி உரிமை இவற்றின் மூலம் சூப்பர் டீலக்ஸ் தயாரிப்பாளருக்கு
முதலீட்டில் நஷ்டத்தைஏற்படுத்தவில்லை
மார்ச் மாதத்தில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றிக் கொடியை பறக்க விட்டதுஅருண் விஜய் நடிப்பில் வெளியான”தடம்”படம் மட்டுமே சுமார் 20 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோ அந்தஸ்துக்காக போராடி வரும் அருண் விஜய் இப்படத்தின் மூலம் கோடிகளில் சம்பளம் கேட்கும் கதாநாயகனாகமுன்னேற்றம் அடைந்தார் தமிழக திரையரங்குகளில் இந்த படம் சுமார் 13கோடி ரூபாய் மொத்த வசூலாக அறுவடை செய்தது
நெடுநல்வாடை கிராமத்து வாழ்வியலையும் நம்பிக்கையையும் வாக்கு தவறாமை இவற்றை மையப்படுத்திய இந்த படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தாலும் தமிழ்சினிமாவில் தவிர்க்கமுடியாத
திரைப்படமாக தன்னை அழுத்தமாகஅடையாளப்படுத்திக் கொண்டது
மூன்று கோடி ரூபாய் வரை ஒரு படத்தில் நடிப்பதற்கு சம்பளமாகக் கேட்கும் அதர்வா நடிப்பில் வெளியான படம் பூமராங் தமிழகத்தில் இந்த படம் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு கூட வசூல் செய்யவில்லைதான் நடிக்கும் படங்களுக்கு என்ன வசூல் என்பதை அறிந்து கொள்ளாமல் ஹீரோகால் சீட்டுக்கு இங்கு நிலவும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கோடிகளில் சம்பளம்கேட்கும் ஹீரோக்களுக்கு உதாரணமாக அமைந்தது பூமராங் படத்தின் தோல்வி
பிற படங்கள் அனைத்தும் பெயரளவுக்கு தயாரித்து விட்டோம் கௌரவத்திற்காக ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற பிடிவாதத்தில்
வெளியிடப்பட்ட படங்களாகும் இந்த படங்கள் ரிலீஸ் செய்வதற்குசெய்யப்பட்ட செலவுத்தொகை கூட
திரையரங்குகளில் வசூல் ஆகவில்லை
மார்ச் மாதம் வெளியான 26திரைப்படங்களில்செய்யப்பட்ட முதலீடுசுமார் 100 கோடி ரூபாய் இவற்றில் பெரும்பாலான படங்களின் தொலைக்காட்சி உரிமை கூட
விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுமொத்த முதலீட்டில்தமிழகத் திரையரங்குகள் மூலம் கிடைத்த வருவாய் சுமார் 35 கோடி ரூபாய்
படப்பட்டியல்:
90 ML,
அடடே,
தாதா 87 ,
பின்விளைவு,
தடம் ,
திருமணம் ,
விளம்பரம்,
பூமராங் ,
கபிலவஸ்து,
பொட்டு,
சத்ரு,
ஸ்பாட் ,
அகவன்,
கில்லி பம்பரம் கோலி,
இஸ்பேட்ராஜாவும் இதய ராணியும்,
சூலை காற்றில் நெடுநல்வாடை,
அக்னிதேவ்,
எம்பிரான்,
மானசி
நீர் திரை
பட்டிபுலம்,
சாரல்
சேட்டைகாரங்க
ஐரா
சூப்பர் டீலக்ஸ்