மாஸ்டர் வசூல் 40 கோடிபடத்திற்கானதா விஜய்க்காகவா?

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘மாஸ்டர்’.

கொரானாதொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் அனைத்துத் தியேட்டர்களிலும் நேற்று 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது

பெரும்பாலான மல்டிபிளக்ஸ்

மற்றும் புறநகர்களில் உள்ள
தியேட்டர்களிலும், வெளிமாவட்டங்களில்  உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் ‘மாஸ்டர்’ படத்திற்கு 100% டிக்கட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது அரசு ஆணையின்படி விதிகளை மீறினால் 5000ம் ரூபாய் அபராதம் மட்டுமே. என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் கொரானாவை பற்றி கவலைப்படாமல் செயல்பட்டனர்
அதன் காரணமாக முதல் நாள் வசூலாக 25 கோடி வரை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இப்படி முதல் நாள் வசூலை யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இல்லை.

கொரானா தளர்வுகளுக்குப் பிறகு நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை. அதை ‘மாஸ்டர்’ படம்தான் மாற்றும் என தியேட்டர்காரர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை.

படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் இந்த பொங்கல் விடுமுறை நாட்களில் பலரும் ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டார்கள்.  இந்தப் படம் முதல்வார முடிவில் சுமார் 100

கோடி ரூபாய் வரை மொத்த வசூலை எட்டும்  என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு மொத்த வசூல் 25 கோடி ரூபாய் என அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தாலும் அதற்கு அதிகமான தொகை வசூல் ஆனதாக வியாபார வட்டாரங்கள் கூறுகிறது சுமார் 700 திரைகளில் மாஸ்டர் ஜனவரி 13 ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது முதல் நாள் முதல் காட்சிக்கு தமிழகம் முழுவதும் மும்மடங்கு விலையில் டிக்கட் விற்பனை செய்யப்பட்டுள்ளது சென்னை போன்ற பெருநகரங்களில் 2500 வரை டிக்கட் விற்பனை செய்யப்பட்டுள்ளது
இரண்டாவது நாள் மாஸ்டர் படத்தின் வசூல் குறைந்துள்ளது என்கின்றனர் புறநகர்களில் இருக்கும் திரையரங்க வட்டாரங்கள் எதிர்பார்த்தபடி படம் இல்லாததால் வசூல் குறைந்திருக்கிறது பொங்கல் விடுமுறைக்காக முன்பதிவு செய்த டிக்கட்டுகள் மூலம் நகர்புறம், மால் திரையரங்குகளில் அடுத்துவரும் ஜனவரி 17 வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக மாஸ்டர் ஓடும் திங்கட்கிழமைக்கு பின்னரே படத்தின் வெற்றியை பற்றி தீர்மானிக்க முடியும். இதுவரையிலான வசூல் விஜய் என்கிற நடிகருக்கானது என்றே கூற முடியும் முதல் வாரத்திற்கு பின்னரும் இப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடினால் படத்தின் தரத்திற்கானதாக இருக்கும் என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்…