மாஸ்டர் முதலில் திரையரங்கில்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானது இது குறித்து படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும் செவன் ஸ்கீரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தலைவருமான லலித்குமாரிடம் கேட்டபோது,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து  வைத்துள்ளது படக்குழு என்றார்

எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பதற்கான உத்திரவாதம் இல்லாத நிலையில் “பொன்மகள் வந்தாள்” நேரடியாகOTT தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தேசிய ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கும் மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி, இணையவழியாக திரைப்படங்கள் பார்ப்பது இதன் காரணமாகOTT தளங்களுக்கான சந்தாதாரர்கள் அதிகரித்து வருகின்றனர் இதனை தக்கவைத்துகொள்ள டிஜிட்டல் தளங்கள் முயற்சியை மேற்கொள்ள தொடங்கியுள்ளன.
இதன் காரணமாக முண்ணனி நடிகர்கள் நடித்துள்ள படங்களை கைப்பற்றும் முயற்சியில் எல்லா நிறுவனங்களும் “மாஸ்டர்” படத்தின் பக்கம் கவனம் செலுத்ததொடங்கியுள்ளதாகவும், “பொன்மகள் வந்தாள்” படத்தை தொடர்ந்து”மாஸ்டர்” வெளியாகும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
 இது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறிவருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து லலித்குமாரிடம்  விசாரித்தபோது, “‘மாஸ்டர்’ படம் முதலில் திரையரங்குகளில்தான் வெளியாகவுள்ளது. அதற்குப் பிறகுதான் டிஜிட்டலில் வெளியாகும்.