2016ல் தமிழ் செல்விதென்னிந்திய அழகி 2021ல் ஜெயிலில் மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன், சர்ச்சைகளில் சிக்கி கைதாகி இருக்கிறார்…. யார் இவர்? இவரின் பின்னணி என்ன? தமிழ்செல்வி என்ற பெயர் தான் இவரின் முதல் அடையாளம். சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் தொழில் செய்ய தொடங்கினார்2013ல் மாடலிங் துறையில்சில வாய்ப்புகளை பெற்ற அவர், பல்வேறு நிறுவனங்களின் மாடலாகவும் செயல்பட்டார் தொலைக்காட்சிநிகழ்ச்சிகளில் தலை காட்டிய அவர் அதற்காக தன் இயற்பெயரை மீராமிதுன் என  மாற்றிக் கொண்டார்.
இந்த சூழலில் 2016ல் நடந்த தென்னிந்திய அழகிப் போட்டியில் கலந்து கொண்ட அவருக்கு முதலிடமும் கிடைத்தது. அப்போது இந்த போட்டியில் 2ஆம் இடம் பிடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. இதன்பிறகு பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார் மீரா மிதுன்.
தனக்கு கிடைத்த விளம்பரம், ஊடக வெளிச்சத்தை கொண்டு தன்னுடைய தலைமையில் மாடலிங் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டார் மீரா மிதுன். அப்போது அந்த நிகழ்வை நடத்த சிலர் தடை செய்வதாக 2019ல் சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் அவர்…இதனால் அதிர்ந்து போன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முறைகேடாக செயல்பட்டதாக கூறி மீரா மிதுனின் தென்னிந்திய அழகி பட்டத்தை பறித்தனர்.
இதன்பிறகு அந்த பட்டம் 2ஆம் இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கு சென்றது. இதன் பிறகு வலைத்தளத்தில்பல்வேறு வீடியோக்களை பதிவிடுவதும், சர்ச்சையாக பேசுவதும் அவரின் வழக்கமாக மாறிப்போனது
நடிகர்கள் விஜய், சூர்யா, த்ரிஷா, ஜோதிகா உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசி அவரின் ரசிகர்களிடம் வசவுகளை வாங்கி கட்டிக் கொண்டார் அவர்..இதனிடையே  நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார் மீரா மிதுன்.
இதன்பிறகு கமல்ஹாசன் தொகுப்பாளராக நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அங்கும் சண்டை சச்சரவுகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து உடனடியாக வெளியேறினார். பின்னர் அரைகுறையான உடைகளுடன் ஆபாசமாக பேசுவது, தன்னுடைய பாய் பிரெண்டுடன் அந்தரங்கமான படங்களை எடுத்து பதிவேற்றுவது என இருந்து வந்தார் மீரா மிதுன்
அவரின் சர்ச்சையான பேச்சுகளே திரைத்துரையில் அவருக்கு கிடைத்த பல வாய்ப்புகள் கைநழுவி போனதற்கு காரணமானது இந்த நிலையில் தான் பட்டியலின இயக்குநர்கள் பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
 அவரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பட்டியலினதலைவர்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வன்னிஅரசு
மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்தார்இதன்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 இதுதொடர்பான விசாரணைக்காக ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டும் மீரா மிதுன் ஆஜராகவில்லை.அப்போதும் கூட, தான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பிய மீரா, தன்னை கைது செய்வது கனவிலும் நடக்காது என்றார்.
இது தமிழக காவல்துறையினர் மத்தியில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது தங்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்க தொடங்கினார்கள் இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்பு வாவில் உள்ள சுப்பீரீம் ரிசார்ட்டில் மீரா மிதுன் தங்கியிருப்பது தமிழக காவல் துறையினருக்கு தெரிபவந்தது இதனையடுத்து ஆணையாளர் கருணாகரன் தலைமையிலான குழு ஒன்று கேரளாவில் மீரா மிதுனை கைது செய்தனர்
 கைது நடவடிக்கைக்காக காவல் துறையினர் ரிசார்ட்டில் நுழைந்தபோது அவர்களை பார்த்த மீரா மிதுன் என்னைத் தொட்டால் என்னை நானே கத்தியால் குத்திக்கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்
அதனை காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷாம் என்பது கண்டறியப்பட்டு அவரையும் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது கைது செய்யப்பட்ட இருவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சாலை மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வந்தனர்
வாகனத்தில் இருந்து இறக்கி மீரா மிதுனை வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றபோது காவல்துறையினருக்கு எதிராக கோஷமிட்டவாறே சென்றுள்ளார் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து மீரா மிதுனிடம் விசாரணை நடத்தப்பட்டது
அப்போது பட்டியல் இன மக்களுக்கு எதிராக பேசியது ஏன், இது போன்ற வீடியோக்களை வெளியிட அவருக்கு உதவி செய்பவர்கள் யார் என்கிற கோணத்தில் கேள்விகள் எழுப்பபட்டுள்ளது அப்போது மீரா மிதுன் வாக்குமூலம் அளிக்காமல் முரண்டுபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் தன்னுடைய வழக்கறிஞர் வந்தால்தான் பேசுவேன் என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
பின்னர் வழக்கறிஞர் வந்ததையடுத்து காவல்துறையினர் கேள்விகளுக்குப்பதில் அளித்துள்ளார் இதையடுத்து மீரா மிதுன் வாக்குமூலத்தைப் பதிவு செய்தபின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் அப்போது அவரை ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்