காதல் நண்பர் விக்னேஷ் சிவனுக்காக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா

விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கானப் படப்பிடிப்பு நேற்று (நவம்பர் 10) பூஜையுடன் துவங்கியது.

‘நானும் ரவுடிதான்’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. படத்தில் மற்றுமொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார்.

படத்தை மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜையுடன் நடைபெற்ற படப்பிடிப்பின் துவக்க விழாவில் விக்னேஷ் சிவனும், விஜய் சேதுபதியுமே கலந்துகொண்டனர். அவ்விழாவுக்கு நயன்தாரா வரவில்லை. பொதுவாக தன் படத்தின் பட விழாவுக்கு எப்போதுமே நயன்தாரா வருவதில்லை.

ஆனால், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கான விழாவில் நயன்தாரா கலந்துகொண்டுள்ளார். நேற்று காலை எட்டு மணிக்கு படத்துக்கான பூஜை போடப்பட்டது. அதில் விஜய்சேதுபதி கலந்துகொள்ள, அவரை வைத்து ஒரு சில காட்சிகளை படமாக்கிவிட்டு அவரை அனுப்பி வைத்துவிட்டார் விக்னேஷ் சிவன். பிறகு, 12 மணிக்கு மேல் நயன்தாரா படப்பிடிப்பு வந்திருக்கிறார். பூஜையில் கலந்துகொண்டுள்ளார். பின்னர், அவரை வைத்து சில காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
வழக்கமான பழக்கத்தை ஓரங்கட்டிவிக்னேஷ் சிவன் மீதுள்ள காதலுக்காகப் பட பூஜையில் வந்து கலந்துகொண்டாராம் நயன்தாரா.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கான முதல் கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதியும், சமந்தாவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஏனெனில், சமந்தா கர்ப்பமாக இருப்பதால் முதலில் அவருடைய காட்சிகளை விரைவாக முடித்துவிட திட்டமாம். சமந்தாவுக்கான காட்சிகளை முடித்த பிறகு தான், நயன்தாராவுக்கான காட்சிகளைப் படமாக்க இருக்கிறது படக்குழு.