நிசப்தம் நேரடியாக டிஜிட்டலில் வெளியீடு

கொரானோ தேசியஊரடங்கு சினிமா துறையை முடக்கியது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் புதிய படங்களை திரையிடுவதை பிரதான தொழிலாக கொண்ட தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இந்தியத் திரையுலகில் அதிக முதலீடு செய்யப்படும் தெலுங்கு திரையுலகம் தற்போது இரண்டு மாநில அரசுகள் எடுக்கும் கொள்கை முடிவுகளை சார்ந்து இயங்கவேண்டியுள்ளது

தெலங்கானா மாநிலத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என மாநில சினிமாட்டோகிராபி அமைச்சர் தலசானி சீனிவாஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த விஷயத்தில்தெலங்கானா மாநில முடிவை பொறுத்தே  ஆந்திராவிலும் தெலுங்குபடங்களை  வெளியிட முடியும். எனவே, அதுவரையில் படத்தை எடுத்து முடித்து வைத்துள்ளதயாரிப்பாளர்களால்காத்திருக்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள படமான ‘நிசப்தம்’ படம் ஏற்கெனவே OTTதளத்தில் வெளியாகும் என்ற செய்தி வெளிவந்தது. ஆனால், அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்தது.

தற்போது ‘நிசப்தம்’ படத்தை OTTயில் வெளியிட சுமார் 26 கோடி வரையில் கொடுத்து உரிமம் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். எத்தனை மொழிகளில் அப்படத்தை OTTயில் வெளியிட உள்ளார்கள் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் தெரியும்.

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலின் பாண்டே மற்றும் பலர் நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தை ஹேமந்த் மதுக்கர்இயக்கி உள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிப்பதில் இருந்து விலக தொடங்கியுள்ள அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ள முதல் கதாநாயகிக்கான முக்கியத்துவம் உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.