கூழாங்கல் இயக்குனரின் சாதிமறுப்பு திருமணம்

0
22
திரைப்படங்களில் சாதி மறுப்புத் திருமணங்கள் பரபரப்பாக காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களில் முற்போக்கு கருத்துகளையும், சாதி ஒழிப்பையும் தீவிரமாக திரைக்கதையில் தீவிரமாக வலியுறுத்தக்கூடிய இயக்குனர்களும், நடிகர்களும் நிஜ வாழ்க்கையில் அதற்கு நேர் எதிராகவே இருந்து வருகின்றனர் ஊழலையும், வரி ஏய்ப்பையும் திரைப்படத்தில் விளாசுபவர்கள் தங்கள் சம்பளத்தை முழுமையாக கணக்கில் வாங்காமல், கறுப்பு பணமாகவே இன்றளவும் பெரும்பான்மையினர் வாங்கி வருகின்றனர் இப்படிப்பட்ட சூழலில் கூழாங்கல் படத்தின் இயக்குநர் சாதிமறுப்பு
திருமணம் செய்திருக்கிறார்

விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து படங்களைத் தயாரித்து வருகினறனர். இந்நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கூழாங்கல்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கியிருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது அனைவரது பாராட்டை பெற்றதால்,. டைகர் பிரிவில் விருதை வென்றது மேலும் பல சர்வதேச விருதுகளையும் இந்தப் படம் குவித்துள்ளது.

இப்படத்தின் இயக்குனர் வினோத் ராஜ், தனது தோழியும் காதலியுமான அறிவுநிலா என்பவரை  திருமணம் செய்யபெண் வீட்டுத் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கோயம்புத்தூரில் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்தை இயக்குனர் ராம் முன்னின்று சாதி மறுப்பு திருமணமாக நடத்தி வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here