இந்தியன் 2 படப்பிடிப்பின்போது நடந்த விபத்து பற்றி கமல்ஹாசனை விசாரணைக்கு அழைத்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார், சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதை நடித்துக் காட்டும்படி வலியுறுத்தியதாக
இப்படி ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே அரசியல் கோபத் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிற நிலையில்… நேற்று (மார்ச் 28) மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலக வாசலில் கொரோனாவால் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற நோட்டீஸை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டிச் சென்றார்கள். பின் சிறு தவறு நடந்துவிட்டதாக சொல்லி அதைக் கிழித்துவிட்டார்கள்.
கமல்ஹாசன் இதற்கு விளக்கம் அளித்துவிட்ட நிலையிலும் இதை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சும்மா விடுவதாக இல்லை. மக்கள் நீதி மய்யத்தின் மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் சு.ஆ. பொன்னுசாமி இதுபற்றி கொஞ்சம் ஆவேசமாகவே செய்தியாளர்களிடம் பேசினார்.
கொரானா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை தனிமைப்படுத்தி தற்காத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு காணொளி வெளியிட்டதோடு மட்டுமில்லாமல் தனது இல்லத்தை கொரானா நோய் தடுப்பிற்கு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ள அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்திருந்தது.
மேலும் கொரானா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு எடுத்து வரும் பல நடவடிக்கைகளை வரவேற்று பாராட்டியதோடு, உடலுழைப்பு, அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் முன் வைத்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இவையெல்லாம் மாநில ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. அதனால் கமல்ஹாசன் மீது வெறுப்பு அரசியலை உமிழும் நோக்கில் “கொரானாவில் இருந்து எங்களையும், சென்னையையும் காக்க நாங்கள் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்” என்கிற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் சுவரில் ஒட்டியுள்ளனர். அவருடைய வீடு தற்போது கட்சி அலுவலகமாக செயல்பட்டு வரும் சூழலில் அங்கே எவரும் குடியிருக்கவில்லை.
மேலும் அந்த சுவரொட்டியில் கமல், அல்லது கமலா என்று தெரியும் வகையில் எழுதியுள்ளனர். இது வேண்டுமென்றே செய்யப்பட்டுளளது. இதுவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் “பழனி” எனவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் “விஜயா” எனவும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பெயர் மாற்றி ஒட்டுவார்களா…? அப்படி ஒட்டி விட்டு தெரியாமல் தவறு நடந்து விட்டது என கூறி எளிதாக கடந்து சென்று விட முடியுமா…?” என்று கூறினார் பொன்னுசாமி.
”இதை சட்ட ரீதியாக மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்ளுமா?” என்று நாம் கேட்க, “இந்த நேரத்தில் மட்டுமல்ல எப்போதுமே நாங்களும் நம்மவரும் மிக பொறுப்புணர்வோடே நடந்துகொண்டு வருகிறோம். ஆனால் அதிமுக அரசு வேண்டுமென்றே வன்மத்தை எங்கள் தலைவர் மீது கக்கி வருகிறது. இதை எங்கள் தலைவர் வேண்டுமானால் பொறுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் சென்னை மாநகராட்சிக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நாங்கள் தலைவரை வலியுறுத்துவோம்” என்றார் பொன்னுசாமி.
கமல் கட்சி அலுவலகத்தில் தேவையின்றி நோட்டிஸ் ஒட்டிய விவகாரத்தில் சென்னை மாநகராட்சி மீது மநீம சார்பாக வழக்குத் தொடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.