பொன்மகள் வந்தாள் ஆகஸ்ட் 15ல் தொலைகாட்சியில்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பொன்மகள் வந்தாள்’.

2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் நேரடியாக இணையதளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது.

இப்படம் மே 29 ஆம் தேதி வெளியானது. பெண் குழந்தைகள் பாதுகாப்பை மையப்படுத்தி உருவான இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் என்கிற நிலையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை இரண்டரை கோடிக்கு விற்கப்பட்டதாம்.

இப்போது நேரடியாக இணையத்தில் வெளியான பின்பு என்னவாகும்? என்று கேட்டால், புதிதாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம்.

அதன்படி, இணையத்தில் வெளியாகி 70 நாட்கள் கழித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம் என்கிற ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம்.

இந்த ஒப்பந்தத்தின்படி ஆகஸ்ட் 15 ஆம் நாள் பொன்மகள்வந்தாள் படம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என்று சொல்கிறார்கள்.