மீண்டும்ஒத்திவைக்கப்பட்ட டாக்டர் பட வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் டாக்டர். இந்தப் படத்தின் ரிலீஸில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் உருவாகிவருகிறது. இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படங்கள் படமாக்கும் ஸ்டேஜில் இருக்கிறது. இந்நிலையில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் படம் முழுமையாக முடிந்து ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது.
சிவகார்த்திகேயனுடன் வினய், ப்ரியங்கா மோகன், யோகிபாபு, இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களுமே செம வைரல். இந்நிலையில், இப்படம் கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. தேர்தல் காரணமாகத் தள்ளிப் போனது. அதன்பிறகு, டாக்டர் படம் வருகிற மே 13ஆம் தேதியான ரம்ஜான் பண்டிகை சிறப்பாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இப்போது, ரம்ஜானுக்கும் டாக்டர் இல்லை என்று சொல்லப்படுகிறது. சென்ற முறை தேர்தல் காரணம் போல, இந்த முறை கொரோனா காரணமாம். கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகளில் 560% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், டாக்டர் வெளியிட்டே ஆக வேண்டுமா என யோசித்துவருகிறதாம் படக்குழு.
திரையரங்குகளில் 50% இருக்கை அனுமதியுடன் தான் தனுஷின் கர்ணன் படம் வெளியானது. நல்ல வசூலையும் பெற்றது. ஆனால், இந்த முறை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும் அமலில் இருப்பதால் திரையரங்க வசூல் பெரிதளவு பாதிக்கும். அதோடு, திரையரங்கம் செயல்பட தடை என்னும் அறிவிப்பு அடுத்து வந்தால் அனைத்துப் படங்களுமே தள்ளிப் போகும் என்பது உறுதி.