கோப்ராபடப்பிடிப்பு இடத்தை மாற்றிய தயாரிப்பாளர்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. விக்ரமின் 58 ஆவது படமான இதை,
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.அதன்பின் கொரோனா காரணமாகத் தடைபட்டது.மீண்டும் படப்பிடிப்புகள் நடக்கத் தொடங்கியுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் தொடங்கவிருக்கிறதென்று சொல்லப்பட்டது. அங்கே சுமார் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு அதன்பின் சென்னையில் சில நாட்கள் அதே படத்தின் படப்பிடிப்பு இருக்கிறது.ரஷ்யாவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்று சொன்னார்கள்.அங்கே சுமார் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.ஆனால் திட்டமிட்டபடி அது நடக்கவில்லை.
இப்போது, ரஷ்யா வேண்டாம், இங்கேயே மொத்தப் படப்பிடிப்பையும் நடத்தத் திட்டமிடுங்கள் என்று தயாரிப்புத் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதை ஏற்றுக் கொண்ட இயக்குநர் குழு அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.