அண்ணாத்த படப்பிடிப்பில் ஓய்வின்றி நடிக்கும் ரஜினிகாந்த்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை கொரானா பரவலுக்கு முன்பே தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டனர்.அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால் அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினரை ரஜினிகாந்த் அறிவுறுத்தினார். இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ரஜினிகாந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட வேகமாக காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையில் வருகிற 30-ந் தேதி சென்னை திரும்பும் அவர் 31-ந் தேதி தனிகட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பார் என்று தெரிகிறது. அதன்பிறகு மீண்டும் ஐதராபாத் சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அடுத்த மாதம் 12-ந் தேதிக்குள் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடித்து விட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.