ஆட்டத்துக்கு தயாராகும் ரஜினியின் அண்ணாத்தே

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்து வரும்படம் அண்ணாத்த கொரானா காரணமாக படப்பிடிப்பை தொடர முடியாமல் தீபாவளி வெளியீட்டை 2021 பொங்கலுக்கு மாற்றியது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முள்ளும் மலரும் படம் போன்ற திரைக்கதை அமைப்பு கொண்ட இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினியின் மனைவியாக நயன்தாரா, மாமன் மகள்களாக குஷ்பூ சுந்தர், மீனா மற்றும் லிவிங்ஸ்டன், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியான், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்து வருகின்றனர்

இரண்டு கட்டமாக படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது மார்ச் மாத இறுதியில் கொல்கத்தா, புனே நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது
இந்த சூழ்நிலையில் அண்ணாத்தே படம் டிராப் ஆகப்போகிறது ரஜினி நடிக்க வர மாட்டார் வாங்கிய சம்பளத்தை திரும்பதரப்போகிறார் என வதந்திகள் கடந்த இருமாதங்களாக நிலவிவந்தது உண்மை நிலவரம்தான் என்ன 2021 பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது ஏப்ரல் மாதம் வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஒரு சிறிய நகரத்துக்குள் நடக்கும் கதை என்பதால் எல்லா காட்சிகளிலும் கூட்டம் நிரம்பிவழியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது
ஆகஸ்ட் மாத இறுதியில் சினிமா படப்பிடிப்புக்கான அனுமதி அரசால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது அப்படியே அனுமதித்தாலும் 60 நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பணியாற்ற அனுமதி கிடைக்கும் அதனால் காட்சிகளை மாற்றி அமைக்கலாமா என்கிற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது என்கின்றனர்
ரஜினி தரப்பை பொறுத்தவரை கொரானா தடுப்பூசி அல்லது மருந்து கண்டுபிடித்த பின்னரே படப்பிடிப்பில் கலந்துகொள்வது என்பதில் உறுதியாக உள்ளனர் இதனை தயாரிப்பு நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது காரணம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினிகாந்தை நோய்தொற்று எளிதாக தொற்றக் கூடும் என்பதால்
ஐதராபாத், புனே, கொல்கத்தாவில் நடத்த வேண்டிய படப்பிடிப்பை சென்னையில் அரங்கம் அமைத்து எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது
என்கிறது சன்பிக்சர்ஸ் வட்டாரம்
பின் ஏன் வதந்தி என்கிறபோது
ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றால் வதந்தி, பரபரப்புக்கு குறை இருக்காது அதுபோன்று தான் அண்ணாத்தே படம் பற்றிய வதந்திகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் பட தயாரிப்பு வட்டாரத்தில்