கந்த சஷ்டி கவசத்தை பற்றி விமர்சித்து கறுப்பர்கூட்டம் யூடியூப் சேனலில் காணொலி வெளியானது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதோடு, வழிபாட்டு முறையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால், கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் இருந்த செந்தில்வாசன், சுரேந்திரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இதற்கிடையில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்தில் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பல காணொலிகள் இருந்ததாகக் கூறி அந்த சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட காணொலிகளை சைபர் கிரைம் காவல்துறையினர் நீக்கியதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு வாரத்துக்கும் மேலாக இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தியுள்ளனர் என ரஜினிகாந்த் கூறி கண்டனம் ட்விட் செய்து உள்ளார்.
கந்த சஷ்டி கவசத்தை மிக கேவலமாக அவதூறு செய்துபலகோடி மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள்மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தபட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்..ஒழியணும்
எல்லா மதமும் சம்மதமே .. கந்தனுக்கு அரோகரா
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் இந்தக்கருத்துக்கு வரவேற்புகளைக் காட்டிலும் விமர்சனங்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன.
வடசென்னையைச் சேர்ந்த கவிதா கஜேந்திரன் ரஜினியை விமர்சித்து எழுதியுள்ள பதிவு…
This guy is biggest exploiter ever of Tamil ppl.இதோ இப்ப வறேன் அரசியலுக்கு அப்ப வறேன்னு 15,20 வருஷமா மக்களை ஏமாற்றி ரசிகர்கள் வாழ்க்கையை நாசப்படுத்திய துரோகி.
இப்ப கூட காவியை அப்பிகொண்டு வரும் this guy தமிழ் இந்து மக்களின் இடஒதுக்கீடு ஏமாற்று வேலையை பற்றி பேசவே பேசாது!#SuperSangi
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது உட்பட ஏராளமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் காணக்கிடக்கின்றன.