சிரஞ்சீவிஆசையை நிறைவேற்றிய மகன் ராம்சரண்

தெலுங்கு சினிமாவில் கால் நூற்றாண்டுகால உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிரஞ்சீவி எத்தனையோ பிரம்மாண்டமான படங்களில் நடித்திருந்தாலும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது ஆனால் அது நிறைவேறாமல் கானல்நீராகி போனது அவரது கனவு தனது மகன் மூலம் நிறைவேறி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் சிரஞ்சீவி

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்றுபூஜையுடன் தொடங்கி உள்ளது. தில்ராஜ் தயாரிக்கிறார்.

இது தொடர்பாக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள டீவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவதுசில படங்கள் தொடக்கத்திலிருந்தே சிறப்பானதாக அமையும். இதுவும் அப்படியான ஒன்று. ஷங்கருடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்து வந்தது.

ராம் சரண் மூலம் அக்கனவு நனவாகி இருக்கிறது. அவர்கள் படம் இன்று தொடங்கியுள்ளது. கியாரா அத்வானி, தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.