கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அவற்றில் ஒன்றாக இன்று இந்தியாவில் ஒரு நாள் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த மக்கள் ஊரடங்கு அமலில் இருக்கும். பிரதமர் மோடியுடைய இந்த சுய ஊரடங்கு கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் இது குறித்து சில வீடியோக்களை வெளியிட்டார்கள்.
நேற்று ரஜினிகாந்த் டிவிட்டரில் ஒரு வீடியோவையும் பதிவையும் போட்டிருந்தார். அது கொரோனா குறித்த தவறான தகவல் எனக் கூறி டிவிட்டர் நிறுவனம் ரஜினியின் இரண்டு டிவீட்களை நீக்கியுள்ளது.
ரஜினிகாந்த் ஒரு டிவீட்டில் யு டியூபில் பதிவிட்ட ஒரு வீடியோவின் லின்க்கையும் போட்டிருந்தார். ஆனால், அந்த வீடியோ இன்னும் யு டியூபில் அப்படியேதான் இருக்கிறது. இருந்தாலும் அந்த லின்க் உள்ள டிவீட்டையும் டிவிட்டர் நீக்கியுள்ளது.
கொரானோ குறித்து யார் தவறான தகவல் பரப்பினாலும் அதை கவனித்து உடனடியாக நீக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் தயாராக உள்ளன.
ரஜினிகாந்தின் டிவீட் நீக்கப்பட்டதற்கு டிவிட்டருக்குக் கண்டனம் தெரிவித்து #