சினிமா இசை ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திச் சென்ற எஸ்பிபி முதன் முதலில் தமிழில் பாடிய பாடல் எது தெரியுமா ?. பலரும் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் என்றுதான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. ‘ஹோட்டல் ரம்பா’ என்ற படத்தில் எல்.ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய பாடல்தான் அவர் பாடிய முதல் பாடல். அந்தப் பாடல் வெளிவரவேயில்லை. தான் முதன்முதலில் தமிழில் பாடிய அனுபவத்தைப் பற்றி ஒரு இசை நிகழ்ச்சியில் எஸ்பிபி கூறியிருப்பதாவது“நான் தெலுங்குல பாடிட்டிருக்கும் போது பரணி என்கிற ஒரு பப்ளிசிட்டி டிசைனர் என்கிட்ட ஏன் தமிழ்ல பாட மாட்டேன்னு கேட்டாரு. இல்லை, எனக்குத் தமிழ் சரியா வராது, எல்லாரும் என்னை கொல்டின்னு சொல்றாங்க, அதான்னு சொன்னேன். அவர்தான் என்னை பரணி ஸ்டுடியோவுல இயக்குனர் ஸ்ரீதர் கிட்ட கூட்டிட்டு போனாரு. அங்க அவரு என்னை பாடச் சொன்னாரு. நான் பெரிய முகம்மது ரபி பக்தன், இன்னைக்கும்தான். அப்படிப்பட்ட கலைஞரை நான் பார்த்ததே கிடையாது. அவரோட ஹிந்திப்
பாட்டைக் கேட்டுட்டு ரொம்ப நல்லா பாடற, தமிழை நீ இப்படி உச்சரிச்சன்னு வச்சிக்கோ, உன்னையும், என்னையும் தமிழ்நாட்ல கல்லால அடிப்பாங்க. முதல்ல தமிழ் கத்துக்கிட்டு வா உனக்கு சான்ஸ் உண்டுன்னு சொன்னாரு. ரெண்டு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு, போஸ்டர்லாம் பார்த்துதான் கத்துக்கிட்டேன் தமிழ். பரணி ஸ்டுடியோவுல ஒரு நாள் ரெக்கார்டிங் முடிச்சிட்டு நான் வெளிய வரேன், அவர் ரீரிக்கார்ட்டிங் ஒண்ணுக்காக உள்ள வராரு. ரொம்ப பாஸ்ட்டா நடப்பாரு. அவரைக் கும்பிட்டு ஒதுங்கி நின்னேன், நீ பாலசுப்ரமணியம்தானேன்னு கேட்டாரு, ஆமாங்கன்னு சொன்னேன். இரண்டு வருஷமானாலும் ஞாபகம் வச்சிக்கிட்டு கேட்டாரு. ஏன் என்னைப் பார்க்கலன்னு கேட்டாரு, இல்லை தமிழ் நல்லா வரலை அதான்னு சொன்னேன். இப்ப தமிழ் நல்லா இருக்கே, நாளைக்கு ஒரு இடத்துக்கு வான்னு சொன்னாரு. மறு நாள் போனேன். ‘ஹோட்டல் ரம்பா’ன்னு ஒரு படம். ‘அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு, அட, இத்தனை நாளா இந்த சுகம் இல்லை, நித்திரையும் வீணாச்சு,”ன்னு நானும்