ஷங்கர் இயக்கும் படத்துக்கு வசனம் எழுதுகிறார் சு.வெங்கடேசன்

தான் இயக்கும் படத்திற்கு தமிழில் முன்னணி எழுத்தாளர்களை திரைக்கதை – வசனம் எழுதவைப்பது இயக்குநர் ஷங்கரின் வழக்கம். எழுத்தாளர் சுஜாதா மறையும் வரை அவருடன் பயணித்த ஷங்கர் அதன்பிறகு வைரமுத்து மகன் மதன்கார்க்கியோடு இணைந்து பணியாற்றினார்.

கடைசியாக அவர் இயக்கிவரும் ‘இந்தியன்- 2’ படத்துக்கு ஜெயமோகன், லட்சுமி சரவணக்குமார், கபிலன் வைரமுத்து என மூன்று பேர் திரைக்கதை, வசனம் எழுதிவருகிறார்கள்.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பின் சு.வெங்கடேசன் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஷங்கர் இயக்கும் பட பூஜையில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது சினிமா பிரபலங்கள் அதிகம் இருந்த அந்த புகைப்படத்தில் அவர் இருந்தது முக்கியத்துவம் பெறாமல் போனது
 நாடாளுமன்றத்தில் தனது கேள்விகளாலும், அமைச்சர்களுக்கு எழுதும் கடிதங்களாலும் கவனம் பெற்று வரும் சு.வெங்கடேசன் அடிப்படையில் எழுத்தாளர்
மத்தியஅரசால்எழுத்தாளர்களுக்கு
வழங்கப்படும் சாகித்ய அகதாமி விருது பெற்றவர்
ஷங்கர் இயக்கும் தெலுங்கு, தமிழ் படத்திற்கு தமிழ் பதிப்புக்கான வசனம் எழுத சு.வெங்கடேஷனை தேர்வு செய்து ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது அதனாலேயே பட பூஜையில் அவர் கலந்துகொண்டார் என கூறப்படுகிறது
 இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு தெலுங்கில் ஶ்ரீ மாதவ் புரா என்பவர் திரைக்கதை – வசனம் எழுதுகிறார் இப்படத்துக்கு கதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என முதலில் செய்திகள் வெளியாகிப் பின்னர், கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குநர் அது ”தன்னுடைய கதை” என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்த சம்பவமும் நடந்திருக்கிறது

கதை தொடர்பாக தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.