சந்தானம் நடித்துள்ளபாரிஸ் ஜெயராஜ் தமிழக உரிமை விலை என்ன

சந்தானம் நடிப்பில் கே.ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஏஒன். இப்படம் சந்தானம் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்று கூறப்பட்டது
இதனால் இந்தகூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ்.இந்தப்படத்தில் கானா பாடகராக நடிக்கிறார் சந்தானம். அதனால் இசைக்கும்பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனாவுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்குப் பின்னர் தொடங்கியது.
நாயகியாக அனைகா நடித்திருக்கிறார்.படத்துக்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன்.ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
கே.குமார் தயாரித்திருக்கும் இந்தப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் பிரபுதிலக் கைப்பற்றியிருக்கிறார்.
இதற்கான விலை சுமார் ஐந்து கோடி என்று சொல்லப்படுகிறது