நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ கனகராஜ் ஆகிய நால்வரும் தான் தமிழ் சினிமாவின் அடுத்த மிகப்பெரிய பிரேக்கிங் நியூஸுக்கான அறிவிப்பை வெளியிடப்போகிறார்கள். அது, ரஜினி-கமல்ஹாசன் இணையும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா அல்லது விஜய்-லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மாஸ்டர் படத்துக்குப் பிறகு உடனடியாக இணையப்போகிறார்களா என்ற இரு அறிவிப்புகளில் ஒன்றாக இருக்கும். இவையெல்லாம் கைகூடியது எப்படி? என்பது பற்றியும் கைகூடாமல் போவதற்கான வாய்ப்பு என்ன என்பது பற்றியும் சில கேள்விகளுடன் இந்த இரு தரப்புக்கும் நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இங்கே
கமலிடம் லோகேஷ்
சரி நீங்கள் செல்லுங்கள் செய்தி வரும் என கமல் சொல்லியனுப்ப, சில நாட்களிலேயே ரஜினியுடன்-கமல் இணைகிறார் என்ற செய்தி பரவியது என்கின்றனர் கமல் தரப்பில்.
கைதி திரைப்படம் மேக்கிங்கில் இருந்தபோதே லோகேஷிடம் மாஸ்டர் படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொல்லிவிட்டார் விஜய். அதன்பிறகு வெளியான பல தகவல்களையும் நம்பாமல் இருந்தாலும், கமல்-ரஜினி இணையும் படத்தை லோகேஷ் இயக்குகிறார் என்ற செய்தி விஜய்க்கு தெரியவந்த சில நாட்கள் கழித்து இருவரும் பேசியிருக்கிறார்கள்.
அந்தக் கதையும் பிடித்துப்போக ஒருவேளை ரஜினியுடன் இணையும் படம் கைகூடவில்லை என்றால் இந்தப்படத்தையும் உடனே தொடங்கி முடித்துவிடுவோம் என்று விஜய் கூறியதால் அந்தக் கதையையும் தயார் செய்யும் பணியில் லோகேஷின் டீம் இறங்கியிருப்பதாகக் கூறுகின்றனர் லோகேஷ் தரப்பினர்.
மில்லியன் டாலர் கேள்வியாக தமிழ் சினிமாவில் சுற்றிக்கொண்டிருப்பது இந்தக் கேள்வி தான். கமல் தரப்பில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் ஷூட்டிங்குக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது.
அதற்காகத்தான் ஒரு பேக்-அப் பிளானாக சுதா கொங்கராவிடமும் கதை கேட்டு ஓகே செய்து வைத்திருக்கிறார் விஜய். ஒருவேளை ரஜினியின் படம் ஒர்க்-அவுட் ஆகவில்லை என்றால் விஜய்-லோகேஷ் படம் உடனடியாகத் தொடங்கிவிடும் என்கின்றனர் லோகேஷுக்கு நெருக்கமானவர்கள்.
ரஜினிக்காக லோகேஷ் கூறியது ஒரு அரசியல் கதை என்கின்றனர் கமல் தரப்பினர். அந்தப்படத்தில் மே மாதத்தில் நடிக்கத் தொடங்கினால் வருட இறுதிக்குள் படம் தயாராகிவிடும். ஆனால், 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும். தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னர்; அதாவது 2021 மார்ச் மாதத்துக்கு நெருக்கத்தில் இந்தத் திரைப்படம் வந்தால் ரஜினியின் அரசியல் மைலேஜுக்கும் இந்தப்படம் உதவும் என்பது ரஜினியின் கணக்கு.