சேத்துமான் – சிறப்பு பார்வை

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையே சேத்துமான் என்ற பெயரில் படமாகியிருக்கிறது. இலக்கியத்தில் இருந்து சினிமா என்பது அவ்வப்போது தமிழ் சினிமாவில் அபூர்வமாக நடக்கும்
மறைந்த எழுத்தாளர்ஜெயகாந்தன் தொடங்கிவைத்தது அடர்த்தியாக தொடரவில்லை என்றாலும் தமிழ்சினிமாவில் அவ்வப்போது எளிய மக்களின் வாழ்க்கை பற்றி வெளியான சிறுகதை, நாவல்கள் படமாக்கப்படுகின்றனஅந்த வரிசையில் சேத்துமான் இணைந்திருக்கிறது நாவலை படமாக்குகிறேன் எனக் கூறி கொத்துபரோட்டா போடாமல்
கன கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குநர் தமிழ்.தலித்தியம், தலித் உரிமைகளை முன் நிறுத்தி செயல்படுபவராக கூறப்படும் இயக்குநர் பா.ரஞ்சித் இது போன்ற முயற்சிகளுக்குமெனக்கெடுவதும், முதலீடு செய்வதும் தமிழ் சினிமாவிற்கான வரம் என்றே கூறலாம்வழக்கமான வணிக சினிமா அதற்கான திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் வரைமுறைகளை சுக்கல் சுக்கலாக உடைத்து திரைக்கலை எனும் காட்சிஅனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு கடத்துகிறது சேத்துமான் படம் ஒரு திரைப்படத்தில் ஒரு திரைக்கதை என்பதை கடந்து ஒவ்வொரு காட்சியிலும்ஒரு கதை சொல்கிறார் இயக்குநர் தமிழ்
தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தை மையமாகக் கொண்டு இந்தப்படத்தை எடுத்து இந்திய நாடுமுழுவதும் நிலவும் சாதீய அதிகாரப்போக்கை அம்பலப்படுத்தியிருக்கிறார்
இயக்குநர் தமிழ்.சேத்துமான் என்பது பன்றியைக் குறிப்பது. மாட்டுக்கறி உண்ணாதே என்று சொல்லும் அரசியலுக்கு எதிராகப் பேசினால் நீங்கள் பன்றிக்கறி பற்றிப் பேசுவீர்களா? என்று எதிர்க்கேள்வி வரும் அதையும் பேசுவோம் திரைப்படம் மூலமாக என களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் தமிழ் மூலம் பா.ரஞ்சித் படத்தில்
எந்தவொரு இடத்திலும் நாங்கள் இதைப்பேசுகிறோம்
என்று சொல்லிப் பேசவில்லை, கதாபாத்திரங்கள் பேசுகின்றன
படத்தில் தாத்தாவாக வாழ்ந்திருக்கும் மாணிக்கம்,பேரனாக வரும் சிறுவன் அஸ்வின்,
பண்ணாடி எனும் ஆதிக்கச்சாதிக்காரராக வரும் பிரசன்னா,  பன்றி வளர்க்கும் குமார், பண்ணாடியின் மனைவி சாவித்திரி உள்ளிட்ட எல்லா கதா பாத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்
ஊருக்குத்தான் பண்ணாடி, அதிகாரம் மிக்கவர் அவரதுவீட்டில் அவர் நிலைமை? பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி பொளந்து கட்டுகிறார். அவர் வரும் காட்சிகளை ரசித்துச் சிரிக்காதவர்கள் ரசனை இல்லாதவர்கள் என்றுதான் கூறமுடியும்தமிழ்நாட்டின்
வட்டார வழக்குகளில் ஒன்றான கொங்குத்தமிழ் என்றால், ஏனுங்க என்னங்க என்பது மட்டுமே என்கிற இதுவரையிலான மாயையைஅடித்து நொறுக்கி எதார்த்தத் தமிழை படமெங்கும் பரப்பியிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள்முருகன்.
தாத்தாவும் பேரனும் நடந்துவரும் முதல்காட்சியில் தொடங்கி கடைசிவரை இயக்குநருக்கு இணையாகக் காட்சிகளில் கதை சொல்லிச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப்காளிராஜா. பண்ணாடி வீட்டில் இருக்கும் சிறுவர்கள் ஓட்டும் மிதிவண்டி முதல் பந்துகள் வரை அனைத்தையும் அஸ்வின் சலனமின்றிப் பார்க்கும் காட்சியின் தாக்கம் பார்வையாளன் மனதைவிட்டு அகலாது பல மணி நேரங்களுக்கு நீடிக்கிறது.
பிந்துமாலினியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்திக்காட்டுகிறது.
ஒருகாட்சிக்குள்ளேயே இன்னொரு காட்சியாக நாமக்கல் மாவட்ட கிராமத்துக்கதைக்குள் இந்திய நாட்டின் குடியரசுத்தலைவரைக் கொண்டுவந்து எல்லோர் முகத்திலும் அறைந்திருக்கிறார் இயக்குநர் தமிழ் வலைத்தளத்தில் மே 27 அன்று சேத்துமான் வெளியாகி உள்ளது
வணிக சினிமாக்களுக்கு மத்தியில் மக்கள் அரசியல் பேசியிருக்கும் குறிஞ்சிப்பூ
சேத்துமான்