இந்தியன்-2 படத்தின் வேலைகள் தாமதம் ஆவதால் தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தபோது ஒப்புக்கொண்டார் ஷங்கர் இந்தியன்-2 படத்தின் வேலைகளை முடித்து தராமல் வேறு புதிய படங்களை ஷங்கர் இயக்குவதற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது
இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக சிரஞ்சீவி, இயக்குனர் ராஜமெளலி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர்கலந்து கொண்டுள்ளனர் ஆர்சி 15 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது