மணிரத்தினம் ரஜினிகாந்த் சூர்யா கார்த்தி படங்கள் தொடக்கம்

இந்த டிசம்பர் மாதம் ஏராளமான படங்கள் வெளியாகவிருக்கின்றன.

அதேபோல ஐந்து பெரிய படங்கள் இம்மாததில் தொடங்கவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் ஆறாம் தேதி, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

டிசம்பர் 12 அன்று மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவிருக்கிறது. முதல்கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொள்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது

ஹரி இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் இம்மாதம் தொடங்கவிருக்கிறதாம்.

அதோடு, வினோத் இயக்கத்தில் அஜீத்  நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பும் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12. அன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.