பிரம்மாண்ட பாகுபலிராணாவுக்கு எளிமையான திருமணம்

தெலுங்கு நடிகராக இருந்தாலும், பாகுபலியில் பல்வாள் தேவனாக வந்து சினிமா ரசிகர்கள் மத்தியில்புகழ் பெற்ற ராணாவின் திருமணம் ஊரடங்குக்கு இடையிலும் ஆகஸ்டு 9 அன்றுநடந்தது. ஹைதராபாத் ராமநாயுடு ஸ்டுடியோவில் தொழிலதிபர் மிஹீகா பஜாஜை கரம்பிடித்தார் ராணா. தெலுங்கு மற்றும் மார்வாடி மரபுகளைப் பின்பற்றிய இந்த திருமணத்தில், ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சமந்தா, ராம் சரண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

கொரோனா ஊரடங்கு என்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டே திருமணம் நடைபெற்றது. வந்திருந்தவர்களில் பலரும் மாஸ்க் அணிந்திருந்தனர். திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. சானிடைசர்கள் வழங்கப்பட்டன.முன்னதாக, நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சுவுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில், ராணா தனது திருமணத்தைப் பற்றி பேசுகையில், என்னால் இதை வார்த்தைகளில் விளக்கிட முடியாது. நான் அவளை சந்தித்தேன். அவளுடன் இந்த ஜென்மத்தை என்னால் வாழ முடியும் என்று உணர்ந்தேன். எங்கள் திருமணம் விரைவாகவும் எளிமையாகவும் நடந்திருக்கிறது என்று கூறினார்.
கடந்த மே 12 ஆம் தேதி தனக்கும் மிஹீகாவுக்குமான காதலை ராணா அறிவித்திருந்தார். தன் படத்தையும், மிஹீகா படத்தையும் பதிவிட்டு, ‘அவள் ஆம் என்று சொன்னாள்’ என்று கவித்துவமான குறிப்புடன் தன் காதலை அறிவித்தார் ராணா. மே 21, 2020 அன்று, ராணா மிஹீகா பஜாஜுடன் தன்னுடைய இரண்டு புகைப்படங்களை ட்வீட் செய்து, “அதிகாரப்பூர்வமானது” என நிச்சயதார்த்தத்தை வெளியிட்டார். இந்த நிலையில்  சிம்பிளாக முடிந்திருக்கிறது பிரம்மாண்ட நாயகனின் திருமணம்.
மிகப் பெரும் விழாவாக நடந்திருக்க வேண்டிய ராணாவின் திருமணம் கொரானா வைரஸ் தொற்று

ஊரடங்கால் எளிமைப்பட்டது. ஆனால் சமூகவலைதளத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடிவிட்டனர் ராணா ரசிகர்கள்