சிவகார்த்திகேயனின் தெலுங்கு மோகம்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘எஸ்கே20’ என தலைப்பிடப்பட்டுள்ள படத்தை, ‘ஜதி ரத்னலு’என்கிற தெலுங்குப் படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார்.
தமிழில் சிவாஜி கணேசன் நடித்தவசந்தமாளிகைபடத்தை தயாரித்தசுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு,மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும் Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
பிப்ரவரி 10, 2022 இல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது இதனை தொடர்ந்து
மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் புதியபடமொன்றில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருந்தார்இப்படத்தை ஐசரிகணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும் எஸ்கே 20 படத்தில் இணைதயாரிப்பாளராக இருக்கும் அருண்விஷ்வாவே தனியாகத் தயாரிக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில்
அந்த வாய்ப்பு எஸ்கே 20 படத்தைத் தயாரித்து வரும் தெலுங்குப்பட நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளதாம் தமிழ் பட தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கும்போது தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது பற்றி விசாரித்தபோதுஎஸ்கே 20 படத்தயாரிப்பின்போது  சிவகார்த்திகேயன் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி அவரை எப்போதும் சந்தோஷத்தில் வைத்திருந்தனர் அதனால் புகழ்வார்த்தை மயக்கத்தில் இருந்த மன்னவன்புலவர்களுக்கு வாரி வழங்கிய மன்னன் போன்று தன்னை இன்பத்தில் ஆழ்த்திய தயாரிப்பாளர்களுக்குஅடுத்த படத்தின் கால்ஷீட்டையும் வழங்கியதில் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர்