சிக்ஸ்பேக்கில் சூர்யா அதிரும் சமூக வலைத்தளம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் வில்லனாக நட்டி நட்ராஜ் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்  தயாரித்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்  இப்படத்திற்கு இசையமைக்கிறார்.கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி  வைரல் ஆனது. அந்த கிளிம்ப்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் அமைந்திருந்தது.கங்குவா படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்புடன்  வைத்திருக்கும் நடிகர் சூர்யா, சிக்ஸ் பேக் உடற்கட்டை காட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. ஜிம்மில்  ஒர்க் அவுட் செய்தபோது சூர்யா எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதென்ன பழனி படிக்கட்டு மாதிரி இருக்கு என சூர்யாவின் சிக்ஸ்பேக்கை வர்ணித்து வருகின்றனர்.நடிகர் சூர்யா கடந்த 2008-ம் ஆண்டு வாரணம் ஆயிரம் படத்திற்காக முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தார். அப்போதிலிருந்து சுமார் 15 ஆண்டுகளாக அதே உடற்கட்டை அவர் மெயிண்டேன் செய்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.