பொதுக்குழு கூட்டம் முடிவடைந்து நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக் குழு கூட்டம் இன்றைக்கு மிக, மிக சிறப்பாக நடைபெற்றது. சௌகார் ஜானகி அம்மாவிற்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கு இந்த பொதுக் குழு எங்களுக்கு முழு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்றுடன் பேச்சைக் குறைத்து நாளை முதல் முழு மூச்சாக செயலில் இறங்குவோம்…” என்றார்.
சங்கத்தின் செயலாளரான நடிகர் விஷால் பேசும்போது,
இது ஒருபுறமிருந்தாலும், தனிப்பட்ட முறையிலும் நடிகர் நடிகைகளிடம் நிதி திரட்ட உள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் என்பதால் நடிகர், நடிகைகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை.
அதேபோல், வங்கியிலும் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி விட்டோம். எல்லா வகையிலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வசூல் செய்து எந்தளவுக்கு விரைந்து கட்டிடத்தை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிப்போம். மேலும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணி சொன்ன வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும்.
ரஜினிகாந்த் அவர்கள் தாதாசாகேப் பால்கே விருது வாங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல், பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பாரதி விஷ்ணுவர்த்தன், ராதிகா சரத்குமார் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டார்கள்.
எங்களது பணியினை நேர்மறையாக தொடங்க இருக்கிறோம். இதன் பிறகு, கட்டடம் கட்டுவதற்கு எந்த தடங்களும், தடைகளும், சச்சரவுகளும் வராது என்று நம்புகிறோம். இது சாதாரண கட்டிடமாக இருக்காது. சென்னையில் ஒரு அடையாளமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அனைவரும் ஒரு முறையாவது நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு வர வேண்டும். அதை மனதில் வைத்துதான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறோம்…” என்றார்.