தமிழ்த் திரையுலகில் கடந்த 50 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் எஸ்பிபி. அவருடன் இணைந்து டூயட் பாடிய பாடகிகள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்.
அப்படி அவருடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பாடியிருக்கிறார். 1974ம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘வைரம்’. டி.ஆர். பாப்பா இசையில் அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘இரு மாங்கனி போல் இதழோரம்…’ என்ற பாடல் எஸ்பிபி, ஜெயலலிதா இருவரும் பாடியிருக்கிறார்கள்.
ஜெயலலிதா இதற்கு முன்பு ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலைப் பாடிய தகவல்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். இப்போது எஸ்பிபியுடன் இணைந்து பாடிய இப்பாடல் பற்றிய தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
எஸ்பிபி, ஜெயலலிதா டூயட் பாடல் இளமையான ஒரு பாடலாக அமைந்த ஒன்று.