இயக்குநர் ஷங்கர் மற்றும் ராம்சரண் முதல்முறையாக இணையும் படத்தின் தொடக்க நிகழ்வு நேற்று ஐதரபாத்தில் நடைபெற்றது.
இந்தப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டு வந்தது
நேற்றுகாலைநடைபெற்ற தொடக்க நிகழ்வில்சிறப்பு விருந்தினர்களாக ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி, இயக்குநர் ராஜமௌலி,இந்தி நடிகர் ரன்வீர் சிங் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராம்சரண் தேஜா ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. இன்று முதல் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த லைகா நிறுவனர் சுபாஷ்கரனுடன் நடந்த சந்திப்பின்போது இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு இந்தப்படத்துக்குப் போவதாக இயக்குநர் ஷங்கர் கூறியிருந்தார்
அதன்படி, கமல் பங்கு பெறாத காட்சிகளின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கத் திட்டமிட்டு வேலைகளை லைகா நிறுவனம் தொடங்கியிருந்திருக்கிறது அந்த வேலைகள்நடந்துகொண்டிருக்கும்
போதே ராம்சரண் படத்திற்கான தொடக்கவிழா நடைபெற்றிருக்கிறது
தன்னிடம் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாகஇந்தப்படம்தொடங்கப்பட்டதா