ஸ்ருதிஹாசனை இயக்கும் சுகாசினி மணிரத்னம்

தமிழ் சினிமா இயக்குனர்கள், பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்குவதில் பலரும் முயற்சித்து முடியாமல் போனது அந்த வாய்ப்பு லைகா மூலம் மணிரத்னத்திற்கு கிடைத்தது முதற்கட்ட படப்பிடிப்பும் நடைபெற்றது கொரானோ பிரச்சினை காரணமாக படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது பெருங்கூட்டத்தை வைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டிய இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க நீண்ட நாட்களாகும் என கூறப்படுகிறது

அதற்கு இடைப்பட்ட நாட்களை வீணடிக்க விரும்பாத இயக்குனர் மணிரத்னம்அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக இணையத் தொடர் ஒன்றைதயாரிக்கிறார்.
காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் எனப்பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது
மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி மற்றும் கார்த்திக் நரேன் உள்ளிட்ட இயக்குநர்கள் குறுந்தொடரை இயக்க உள்ளனர்
இவற்றில் ஒரு படத்தை சுகாசினி இயக்குகிறார். நாயகியை மையப்படுத்திய கதை என்பதால் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்
இக் குறும்படத்தின் படப்பிடிப்பு இப்போது மிகவும் எளிய முறையில் நடந்து கொண்டிருக்கிறதாம். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது