படப்பிடிப்புக்கு குஜராத்துக்கு போக தயாராகும் சுந்தர் சி

0
232

அரண்மனை, அரண்மனை- 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ளாராம். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

குஜராத்தில் ஒரு அரண்மனை புதிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறதென்று, அங்கே போய் பெரும்பகுதிப் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டனர்.பிப்ரவரி 23 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

கொரோனா சிக்கல் காரணமாக மார்ச் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தடைபட்டது. மீண்டும் திரைப்படப் படப்பிடிப்புகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி தரவில்லை.

ஆனால் இந்தியாவிலேயே அதிக பாதிப்புள்ள மகாராஷ்டிரா மாநிலம் உட்பட எல்லா மாநிலங்களிலும் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே, தமிழக அரசின் அனுமதிக்குக்காத்திராமல் குஜராத் அரசின் அனுமதியோடு அரண்மனை 3 படப்பிடிப்பை நடத்தும் முயற்சியைத் தொடங்கிவிட்டார்களாம்.

பாதுகாப்பு ஏற்பாடுகளோடு படக்குழுவினரை அழைத்துச் செல்லும் திட்டத்தைத் தயாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் சுந்தர்.சி.

இதனால் விரைவில் அரண்மனை- 3 படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here