சிரஞ்சீவிக்கு அறுவை சிகிச்சை காட்பாதர் படப்பிடிப்பு ரத்து

நடிகர் சிரஞ்சீவி, தெலுங்குஆச்சார்யா படத்தை முடித்து விட்டு தற்போது மலையாளலூசிபர்தெலுங்குரீமேக்கான காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குனர் மோகன்ராஜா இயக்கி வருகிறார். படப்பிடிப்பின்போது சிரஞ்சீவிக்கு அடிக்கடி வலது கை உணர்விழந்தது. இதனால் அவர் சண்டை காட்சிகளில் முழு ஈடுபாட்டுடன் நடிக்க சிரமப்பட்டார்.

இதை தொடர்ந்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கார்பண்டல்ஸ் சிண்ட்ரம் எனப்படும் அடிக்கடி கைகள் மரத்துப்போகும் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அவருக்கு அங்கு ஆபரேஷன் நடந்தது.தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் சிரஞ்சீவி இதுகுறித்து கூறியிருப்பதாவது
எனது வலது கை அடிக்கடி உணர்வற்று போவதால் சரியாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதற்காக கையின் நடு நரம்பில் ஆபரேஷன் செய்து கொண்டேன்.
இந்த ஆபரேஷன் 45 நிமிடங்கள் நடந்தது. இது பூரண குணமாக 15 நாட்கள் ஆகும் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். என்று தெரிவித்திருக்கிறார். இதை தொடர்ந்து காட்பாதர் படத்தின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது