சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’2021 நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மொழிகளில்வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள்.
மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார்.
இவருடன் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான்ரோல்டன்இசையமைத்துள்ளார்.
மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.
அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதே படத்தின் உள்ளடக்கம் என்கிறார் இயக்குநர் ஞானவேல் சூர்யா தயாரிக்கும் படங்கள் அனைத்திலும் சமகால அரசியல் பற்றிய விமர்சனங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன அந்த வகையில் “ஜெய்பீம்” அரசியல் சார்ந்த படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
பழங்குடி மக்கள் சம்பந்தபட்ட வாழ்க்கைமுறை, முரண்பாடுகளை பேசும் இந்தப் படத்தின் கதாநாயகன் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறர் அந்த கதாபாத்திரத்தின் பெயர் சந்துரு இதுவே ஒரு அரசியல் குறியீடாகவே தெரிகிறது
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் சந்துரு அவரது வழக்கறிஞர் தொழில் காலத்தில் தொழிலாளர்கள், இடதுசாரி இயக்கங்கள் சம்பந்தபட்ட வழக்குகளில் ஆஜராவதை பிரதான பணியாக கொண்டு செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது அவரது பெயர் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்திற்கு வைத்திருப்பது படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.