ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு, நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போராடி வருகின்றனர்.
சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவரான டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று(பிப்ரவரி 9) மாலை செய்தியாளார்களுக்குப் பேட்டியளித்தார். அவர் உரையாற்றும் போது, “லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டத்தை சந்தித்ததாக விநியோகஸ்தர்கள் பல்வேறு சங்கங்களிலும் புகார் அளித்து வருகின்றனர்.
பேட்ட படத்தின் அளவிற்கு படம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் இதற்கு விலை அதிகமாகக் கொடுத்துவிட்டார்கள். பொங்கலுக்குள் தர்பார் பழைய படமாகிவிட்டது. இது ஒரு தமிழ் படம் என்கிறார்கள், ஆனால் படத்தை தமிழகத்தில் எடுக்கவில்லை, படத்தில் தமிழை தவிர இந்தியையே பெரும்பாலானவர்கள் பேசுகின்றனர் என விநியோகஸ்தர்கள் புலம்புகின்றனர்.
ஒரு வேளை அவர்கள் கைது செய்யப்பட்டால் எங்கள் சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களையும் எங்களுக்கு ஆதரவான தயாரிப்பாளர்களையும் திரட்டி நாங்கள் குரல் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.