
இந்தப் பின்னணியில், இந்த நாவலின் பதிப்புரிமையைப் பெற்ற காலச்சுவடு பதிப்பகம்,



மாடு அணையிறவங்களோட நிறைய பயணம் பண்ணிருக்கார். அவங்க ஊர்களுக்குப் போய், அவங்களோடே தங்கி நிறைய தகவல்களைச் சேகரிச்சு ‘வாடிவாச’லை அப்பா எழுதியிருக்கார். அவரேதான் இதை பதிப்பிச்சார்… ஒரு ரூபா விலை வச்சார். ‘எழுத்து’ சந்தாதாரர்களுக்கு இலவசமாக பிரதிகள் அனுப்பி வச்சார். ஆனா, அதன் பிறகு அவரோட பல படைப்புகளையும், மற்ற படைப்புகளையும் அவர் பதிப்பிச்சிருந்தாலும் ஏனோ வாடிவாசலை அவர் மீண்டும் புத்தகமாக போடவே இல்ல!” என்கிறார்
செல்லப்பா எடுத்த புகைப்படங்களைப் பற்றி மேலும் பேசிய சுப்ரமணியன், “ஜல்லிக்கட்டு மேல அப்பாவுக்கு இருந்த ஈடுபாட்ட ‘வாடிவாசல்’ போலவே, ஜல்லிக்கட்ட அவர் எடுத்த புகைப்படங்களும் சாட்சி. அப்பயே அது ரொம்பப் பழைய கேமராவா இருந்திருக்கு… அத வச்சு ஏகப்பட்ட படங்கள் எடுத்திருக்கார். இதுல இன்னும் ஆச்சர்யம், எடுத்த படங்களை ஸ்டுடியோவுக்குப் போகாம, சொல்யூஷன் எல்லாம் வாங்கி, வீட்டிலேயே டார்க் ரூம் ரெடி பண்ணி அவரே எக்ஸ்போஸ் பண்ணிருக்கார். அவரோட இந்த முயற்சில நிறைய நெகடிவ் அழிஞ்சுப் போச்சு. ஆனாலும் இப்ப இருக்க படங்களப் பாக்கும்போது ரொம்ப பிரமிப்பா இருக்கு” என்கிறார் பெருமை பொங்க!
காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் இதுகுறித்துப் ஊடகங்களிடம் பேசியபோது“1959-ல் வெளியான ‘வாடிவாசல்’ நாவல் முதல் பதிப்பின் விலை ஒரு ரூபாய். அதன் பிறகு இந்நாவல் தனி நூலாகப் பிரசுரமாகவே இல்லை. அவரும் பதிப்பிக்கவில்லை; வேறு யாரும் முன்னெடுக்கவில்லை. தொண்ணூறுகளின் பிற்பகுதில் செல்லப்பாவின் சிறுகதைகளின் தொகுப்பு ஓன்று வெளியாகி அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் நூலகங்களுக்கு விநியோகக்கப்பட்டன. அதில் ஒரு கதையாக இடம்பெற்றது ‘வாடிவாசல்’.
இப்படித் தொடர்ந்து நாவலைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால், செல்லப்பா அவர்களின் மகன் சுப்ரமணியன், நாவலின் திரைப்பட உரிமையையும் காலச்சுவடு பதிப்பகத்துக்கே வழங்கியிருந்தார். எங்கள் புத்தகங்களை அமெரிக்காவில் பிரசுரிக்க வகை செய்யும் இலக்கிய முகவர் ப்ரியா துரைசாமியின் சட்ட ஆலோசனையுடனும் அரவிந்தனின் ஆதரவுடனும் தற்போது நாவல் திரைப்படமாவதற்கான ஒப்பந்தத்தில் செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன், பதிப்பாளர், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருடன் கையொப்பம் இட்டிருக்கிறோம் என்கிறார்
அதன்பின், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி 2020சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்நிலையில் 2021 ஜூலை 16 அன்றுவாடிவாசல்’ படத்தின் தலைப்பு வடிவமைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.சூர்யா இரசிகர்கள் இதனை சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதைப் படக்குழு இன்னும் தெரிவிக்கவில்லை.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரியவுள்ளனர் பிற நடிகர் நடிகைகள், கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தை தயாரித்த V. கிரியேஷன் சார்பில் கலைப்புலி தாணு வாடிவாசல் படத்தை தயாரிக்கின்றார்