வானம் கொட்டட்டும் டீசர் எப்படி?

0
326

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘படைவீரன்’. அந்தப் படத்தின் இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தின் டீசர்  ஜனவரி 8வெளியானது.

வயலும், மலையும் நிறைந்த பசுமையான சூழலில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. முதிர்ச்சியான, கம்பீரமான தோற்றத்தில் சரத்குமார் நடித்துள்ளார். விக்ரம் பிரபு மீண்டும் கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். வித்தியாசமான பல அம்சங்களைக் கொண்ட இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 மணிரத்னம் மற்றும் படத்தின் இயக்குநர் தனசேகரன் இணைந்து இந்தப் படத்துக்கான கதையை எழுதியுள்ளனர். பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், சூர்யவம்சம் திரைப்படத்தில் இணைந்து நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தனர். இந்தத் திரைப்படம் மூலம் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.

ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ள ‘வானம் கொட்டட்டும்’ படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here