தணிக்கையானது விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம்

ஜனவரி 13 2021அன்று விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தணிக்கை டிசம்பர் 18 அன்று பகல் 3 மணிக்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் திரையரங்கில் நடந்து முடிந்திருக்கிறது.படம் பார்த்த தணிக்கைக்குழுவினர், படத்தில் ஒன்பது இடங்களில் வெட்டு கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.அதை ஒப்புக்கொண்டால் Uசான்றிதழ் கொடுப்பதாகவும் இல்லையெனில் யுU/Aசான்றிதழ் கொடுக்கப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள் தணிக்கை குழு குறிப்பிட்டிருக்கும் வெட்டுக்களை இயக்குனர் மற்றும் நடிகர் தரப்பில் ஏற்கவில்லை என கூறப்படுகிறது எனவேU/A சான்றிதழ் படத்திற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறதுஜனவரி 13 ஆம் தேதி வெளித்யாகும் படத்தை டிசம்பர் 18 ஆம் தேதியே தணிக்கைக்குழுவுக்கு அனுப்பியதற்கும் காரணம் என்ன என விசாரித்த போது.வெளிநாடுகளில் தணிக்கை செய்ய பத்து வேலைநாட்கள் தேவை.ஆண்டுக்கடைசியில் கிறிஸ்துமஸ்விடுமுறை காரணமாக நிறைய விடுமுறை நாட்கள் வருவதால் இங்கு முன்கூட்டியே தணிக்கை செய்திருக்கிறார்களாம்..இங்கு தணிக்கை செய்யப்பட்ட பின்புதான் அங்கு அனுப்பமுடியும் என்பதால் முன்னதாகவே இங்கு தணிக்கை நடந்திருக்கிறது