ஐக்கிய அரபு அமீரகம் மோகன்லால் மம்முட்டிக்கு வழங்கிய கௌரவம்

திரைப்பட துறை கலைஞர்கள் ஓய்வுக்கும், கேளிக்கை கொண்டாட்டங்களுக்கும் விரும்பி செல்கிற வெளிநாடுகளில் ஐக்கிய அரபுஅமீரகம்முதன்மையானது கேரள மாநிலத்தவர் அதிகமாக பணிபுகின்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் மலையாளிகள் பங்களிப்பு பிரதானமானது திரைப்பட நடிகர்கள் அதிகளவில் முதலீடுகள் செய்து இருப்பதாக கூறப்படுவது உண்டு அப்படிப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம்

மலையாளசினிமாவின்அடையாளமாக திகழும்  நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்கவும் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின.
இதன்படி பத்து வருட காலம் இந்த விசா செல்லுபடியாகும்.. அதன்பின் தானாகவே அடுத்த பத்து வருடத்திற்கு அவை புதுப்பிக்கப்படும்.. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கி வரும் ஐக்கிய அரபு அமீரக அரசு, மலையாள திரையுலகில் இருந்து முதன்முறையாக மோகன்லால், மம்முட்டி இருவருக்கு மட்டுமே தற்போது வழங்கி கவுரவித்துள்ளது.