தடையறத் தாக்க,அட்டகத்தி, கபாலி, ஓநாய்கள் ஜாக்கிரதை, ஸ்கெட்ச், சண்டக்கோழி2 உட்பட பல படங்களில் குறிப்பிடத் தகுந்த வேடங்களில் நடித்திருப்பவர் விஸ்வந்த்.இவர் இப்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார்.கொரோனாவுக்குப் பிறகு நேற்று முன் தினம் தொடங்கிய அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
அங்கே அவருக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள நடந்தனவாம்.
அவை பற்றி அவர் கூறியதாவது…..
கொரோனா ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு எனது முதல் படப்பிடிப்பு. மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் இந்தப் படத்தில் நானும் ஒரு பங்கு பெற்றிருப்பதில் மிகவும் மகிழ்ச்சியான செய்தி.இந்தியாவின் அடையாளமான ரஜினிகாந்த் சார், இயக்குநர் சிவா சார் மற்றும் அண்ணாத்த படக்குழுவினருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.“சன் பிக்சர்ஸ்” நிறுவனம், படப்பிடிப்புத் தளத்தில் மிகச்சிறப்பான முறையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.முதல் நாள் படப்பிடிப்பின்போது ரஜினி சார் என்னைப் பார்த்ததும், இரண்டு நாட்களுக்கு முன்புகபாலிதிரைப்படத்தை மீண்டும் பார்த்தேன்,உங்கள் பாத்திரமும் நடிப்பும் சிறப்பு என்று பாராட்டினார். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அதோடு அண்ணாத்த படத்தின் கதாபாத்திரம் பற்றியும் அதில் நான் நடிப்பது பற்றியும் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தார். ரஜினி சார் என்னைப் பாராட்டிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இயக்குநர் சிவா சார் கபாலியில் உங்கள் கேரக்டரை மிகவும் ரசித்தேன் என்று கூறினார்.அதைப் பார்த்துவிட்டுத்தான் இந்தப்படத்தில் நடிக்க அழைத்தேன் என்றும் சொன்னார்.இவ்வளவு பெரிய பாராட்டுகளை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இந்த இன்ப அதிர்ச்சியை எனக்குக் கொடுத்த ரஜினி சாருக்கு மிக்க நன்றி.அண்ணாத்த படத்தில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய சிவா சாருக்கும் நன்றி.என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார் விஸ்வந்த்.