விடுதலை படத்தில்ஸ்டைலிஷ் இயக்குநரை இயக்கும் வெற்றிமாறன்

படப்பிடிப்பில் நடிகர் நடிகைகளிடம் வேலை வாங்கும் இயக்குநர்கள் நடிகர்களாகமாறுகிறபோது அவர்களை இயக்குவது எளிதாகிவிடுகிறது சமீப வருடங்களாக இயக்குநர்கள் தொழில்முறை நடிகர்களாக வெற்றிபெற்று வருகிறார்கள்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் கௌதம்மேனன் செப்டம்பர் 14 அன்று வெளியான ருத்ரதாண்டவம் படத்தில் அரசியல்வாதியாகநடித்திருந்தார் திரையில் அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தியது
வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போலீசாக சூரியும் அவரது தந்தையாக விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்கள் இந்தப் படத்தில்
கெளதம் மேனன், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சூரியின் உயர் அதிகாரியாக கௌதம் மேனன் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். வெற்றிமாறன், கௌதம்மேனன், விஜய்சேதுபதி, சூரி கூட்டணி காரணமாக படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.