பதட்டத்தில் கர்ணன் திரையிட்ட திரையரங்குகள்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார், விக்ரம்,சூர்யா, தனுஷ் ஆகியோர் நடித்த படங்கள் திரைக்கு வருகிறபோது தியேட்டர்களில் ஒருநாளுக்குரிய மொத்த காட்சிக்கான டிக்கட்டுகளை கூடுதல் விலை கொடுத்து ரசிகர் மன்றங்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது வழக்கம் குறிப்பாக தென்மாவட்டங்களில் இதனை எல்லா ரசிகர்மன்ற தலைவர்களும் தொழிலாகவே செய்து வருகின்றனர் வசதிபடைத்த, கடன் வாங்கும் தகுதி படைத்த ரசிகர்மன்ற தலைவர்கள் குறிப்பிட்ட ஊர்களில் உள்ள தியேட்டர்களில் அவர்களே மினிமம் கேரண்டி அடிப்படையில் விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து படங்களை வாடகைக்கு திரையிடுவது உண்டு கர்ணன் படத்தின் முதல் மூன்று நாட்களுக்கான காட்சிகளுக்கான டிக்கட்டுகளைபல ஊர்களில் ரசிகர்மன்றத்தின் சார்பில்  மொத்தமாக வாங்கியுள்ளனர் அதுபோன்ற நடைமுறைகளை அனுமதிக்க வேண்டாம் இயல்பாக தியேட்டருக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் வந்தால் போதும் என தயாரிப்பு தரப்பு கறாராக கூறியுள்ளதாம் இதற்கு காரணம் கர்ணன் படத்தின் ஏரியா உரிமைகள் தொடக்கத்தில் அவுட்ரேட், மினிமம் கேரண்டி அடிப்படையில் வியாபாரம் பேசி ஒப்பந்தம் போடப்பட்டது

இதுபோன்றுதான் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது கொரானா வால் தியேட்டர் மூடப்பட்டு ரீலீஸ் தாமதமானது ஜனவரியில் படம் வெளியான போது 50% இருக்கைகளுக்குமட்டுமேஅரசு
அனுமதி வழங்கியதால்விநியோக முறையில் மாஸ்டர் படத்தை வெளியிட்டனர் கொடுத்த அசல் 50% இருக்கை அனுமதியால் வசூல் ஆகுமா என்ற பயத்தில் படம் வாங்கியிருந்த விநியோகஸ்தர்கள்வியாபார முறையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டனர் முழு பொறுப்பும் தயாரிப்பாளருடையதாக மாறியது மாஸ்டர் படம் அனைவருக்கும் லாபம் கொடுக்கும் அளவுக்கு கல்லா கட்டியது
அதே சூழல் ஏப்ரல் 9 அன்று வெளியான” கர்ணன்” படத்திற்கும் ஏற்பட்டது ஏப்ரல் 10 முதல் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று அரசு ஆணை பிறப்பித்ததால் பட வெளியீடு ஒத்திவைக்கப்படலாம் என்று வதந்தி பரவ தொடங்கியதுமே தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சொன்னபடி சொன்ன தேதியில் கர்ணன் திரைக்கு வருவான் என்று அறிவித்தார் உடனடியாக அவுட்ரேட், மினிமம் கேரண்டியில் விநியோகஸ்தர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து விநியோக முறையில் கர்ணன் படத்தை வெளியிட்டார் மாஸ்டர் படத்தில் விநியோகஸ்தர்கள் பயந்தனர் கர்ணன் படத்தில் விநியோகஸ்தர்கள் வேண்டாம் என்றபோதும் துணிச்சலாக முடிவு எடுத்தது தயாரிப்பாளர் தரப்பு கர்ணன் படத்திற்கான முன்பதிவு ஏப்ரல் 6 அன்று இரவு 7 மணிக்கு தொடங்கியபோது படத்திற்கான வரவேற்பு, எதிர்பார்ப்பு தெரிந்ததால் மொத்த வசூல் நமக்கே வரவேண்டும் என்கிற நம்பிக்கையும், துணிச்சலுமே காரணம் என்கின்றனர் கலைப்புலி தாணுவின் நம்பிக்கை நிஜமானது கர்ணன் எதிர்பார்த்ததை காட்டிலும் கல்லாவை நிரப்பி வருகிறது அதேநேரம் தியேட்டர்களில் உண்மையான வசூல் கணக்கை கண்டறிய தமிழகம் முழுவதும் தயாரிப்பாளர் தரப்பு திரையரங்குகளை கண்காணிக்கவும் தேவைப்பட்டால் சோதனையும் செய்து வருகிறது அதேபோன்று 50% இருக்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை பெரும்பான்மையான திரையரங்குகள்கடைப்பிடிக்கவில்லை என்பதையறிந்து வணிகவரி துறையும் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளதால் திரையரங்குகள் இருமுனை சோதனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எப்போது யார் சோதனைக்கு வருவார்கள் என்கிற பதட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளனர்