பரியேறும் பெருமாள்,இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர்,குதிரைவால்,படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘ஜே பேபி’ தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் தினேஷ் மாரி இப்படத்தை இயக்கியுள்ளார். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.இந்த நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதில் முழுக்க தனியொரு பெண் ஆளுமையாக
Related Posts
ஆக்கிரமித்துள்ளார் நடிகைஊர்வசி. தாய்க்கும் மகன்களுக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்துள்ளது என்பதை படத்தின் முன்னோட்டம் நமக்கு புரியவைக்கிறது. ‘வெல்லம் விக்கப் போகும்போது காத்தடிக்குது… பொறி விக்கப் போகும்போது மழை வருது’.. ‘ஏன் ரெண்டையும் சேர்த்து பொறி உருண்டை விக்க வேண்டித்தானே’ என்று மாறன் பேசும் வசனங்களும் முன்னோட்டத்தில் கவனம் ஈர்த்துள்ளன.