கோபத்தில் குடைசாய்ந்த நகைச்சுவை கோபுரம் வடிவேல் எதிர்காலம்

0
170

வடிவேல் இவர்படம் நடிக்கிறாரோ இல்லையோ. அவரது புகைப்படம் இல்லாமல் அரசியல் மீம்ஸோ, நையாண்டியோ இல்லை. படவாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருந்தாலும், கான்ட்ராக்டர் நேசமணியை உலக அளவில் ட்ரெண்டாக்கி அவரை பேச வைக்கிறார்கள். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் குடும்ப உறுப்பினர்களில் இடம்பெற்றவர் குடும்பங்களுக்கிடையிலான உரையாடல், நட்பு வட்டங்களில்உரையாடல், அங்காளி, பங்காளி சண்டை, தெருச்சண்டை, பெண்களுக்கிடையிலான வாக்குவாதம் என அனைத்திலும் வடிவேலு பேசிய திரைமொழி இடம்பெறாமல் போகாது அந்தளவுக்கு  இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகதன்னைசெழுமைப்படுத்திக்கொண்டசுயம்புவடிவேல்இதற்குஅடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண்

என்பதுகளின் இறுதியில்  ராஜ்கிரண் ஒரு திருமணத்துக்காக மதுரை வருகிறார். காலையில் திருமணம் முடிகிறது. இரவுதான் ரயில். அதுவரை ஹோட்டல் அறையில் போரடிக்குமே என்று திருமண மாப்பிள்ளை, என் ப்ரெண்ட் ஒருத்தனை அனுப்புறேன். நல்ல காமெடியா பேசிட்டிருப்பான் என்று ஒரு நபரை அனுப்பி வைக்கிறார்.

அந்த நண்பனும் வந்து, ஊரில் போடும் அலப்பறைகளை பாடிலாங்வேஜுடன் சொல்கிறார். ராஜ்கிரணுக்கு ஒரே சிரிப்பு. அந்த நபரை பிடித்துப் போகிறது. இரவு ரயில் ஏறி சென்னை வந்துவிடுகிறார். இரண்டு வருடங்கள் கழித்து, 1991 இல் திண்டுக்கல் அருகில் சித்தையன் கோட்டையில்
 என் ராசாவின் மனசிலே படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
இரண்டு காட்சிகள் வருகிற சின்ன வேடம் ஒன்று இருக்கிறது. புதிதாக யாரையாவது போடலாம் என்று யோசிக்கிற ராஜ்கிரணுக்கு மதுரை ஓட்டலில் சந்தித்த நபர் நினைவுக்கு வருகிறார்.
சென்னையில் உள்ள தனது அலுவலகத்துக்கு தகவல் கூறி அவர்கள் ராஜ்கிரண் கலந்து கொண்ட திருமணத்தின் மாப்பிள்ளையை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்கிறார்கள்.
மறுநாள் காலை சித்தையன்கோட்டை அருகில் நடந்த ஷுட்டிங்கில் அந்த நபர் கலந்து கொள்கிறார். அவர்தான் வடிவேலு. “சவுக்கியமாண்ணுதானே கேட்டேன், அதுக்குப் போய் அடிக்கிறீங்களே” என்று கவுண்டமணியிடம் அடி வாங்கியபடி பேச வேண்டும் என்பது இயக்குநர் கூறிய வசனம்
வடிவேலு கூடுதல் பிட்டாக, “படக்கூடாத இடத்துல அடி பட்டுரப் போவுதுண்ணே” என்கிறார். ராஜ்கிரணுக்கு அந்த சமயோசித டயலாக் பிடித்துப் போகிறது. திட்டமிட்டதை காட்டிலும் காட்சியை கூடுதலாக்கி “போட போடா புண்ணாக்கு” என்கிற பாடல் காட்சியில் வடிவேலுவைபாடி நடிக்க வைக்கிறார் ராஜ்கிரண் அந்த படம் திரையிட்ட பெரும்பான்மையான திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடியது எவரது சாயலும் இல்லாத வடிவேலு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சிரிப்பு நடிகராக சிறகடித்து பறப்பதற்கான தொடக்க புள்ளியாக அமைந்தது “என் ராசாவின் மனசிலே”

என் ராசாவின் மனசிலே படம் முடிந்த பிறகு ராஜ்கிரணுடன் வடிவேலு சென்னை வருகிறார். அவரது அலுவலகத்தில் தங்கியிருந்து படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார்.  1992 இல் கமலுடன் சிங்காரவேலன். படம் முழுக்கவடிவேலை கவுண்டமணி திட்டியும், அடித்தும் கொண்டிருப்பார்.

கமல்ஹாசன்ஒருநாள் வடிவேலிடம், ஏன் இப்பிடி பண்றார் என்று கேட்க, அவர் அப்படித்தான் என்கிறார் வடிவேலு. தான் அடுத்து படம் பண்ணும்போது கூப்பிடுகிறேன் என்கிறார் கமல்ஹாசன் அதே வருடம் தேவர்மகன் படத்தில் நடிக்க வடிவேலுக்கு வாய்ப்பு வழங்குகிறார் கமல்ஹாசன்
அதுவரை சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடத்தை தருகிறார் கமல்ஹாசன் குறைவான வார்த்தை கொண்ட வசனம் என்றாலும் வடிவேலு என்கிற கலைஞனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம் தேவர்மகன்
 
1991 தொடங்கி 2011 வரை வடிவேலு நடித்த படங்களின் எண்ணிக்கை 263 தேவர்மகன் படம் வெளியான பின் 2010 வரை வெளியான நேரடி தமிழ் படங்களின் மொத்த எண்ணிக்கையில் 20% படங்களில்  படம் நெடுக அல்லது காமெடி ட்ராக்கில் வடிவேலு நடித்திருப்பார்
 
தண்ணீரை எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவமைப்புக்கு ஏற்ப நீர் நிரம்பி இருக்கும் அதுபோன்றுதான் வடிவேல் கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிகொள்வதுடன் அதற்கு தனிதன்மை மூலம் மெருகேற்ற கூடியவர்
நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். வீச்சருவா வீராசாமி,சூனா பானா,தீப்பொறி திருமுகம்,நாய் சேகர்,ஸ்நேக் பாபு, படித்துறை பாண்டி,என்கவுண்டர் ஏகாம்பரம்,பாடி சோடா,வண்டு முருகன், கோபாலு,அலாட் ஆறுமுகம், கைப்புள்ள என்று ஒவ்வொருகதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை சிரிப்பில் மூழ்கடிக்கும் அசாத்திய நடிகர்
கோபம் உடம்புக்கு ஆகாது என்று தன் கதாபாத்திரங்கள் மூலம் மக்களுக்கு சொன்ன வடிவேல் தன் மண்ணின் மைந்தன் நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் விஸ்வரூபம் எடுத்து அதன் காரணமாக 2011 முதல் இன்றுவரை வனவாசம் போனது போன்று கடந்த பத்தாண்டுகளாக அவர் கால்ஷீட்டுக்காக எந்த தயாரிப்பாளரும், இயக்குநர்களும் அவரை தேடிப் போகவில்லை காரணம் தமிழக அரசியல் களம் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதலுக்கு என்ன காரணம் என்பதை இருவருமே வெளிப்படையாக கூறவில்லை
தன் பாதுகாப்புக்காக அன்றைய ஆளுங்கட்சியான திமுக தலைவர்
மு. கருணாநிதியுடன் இணக்கமானார் நடிகர் வடிவேல் விஜயகாந்தை திட்டுவதற்காக 2011 சட்டசபை தேர்தலில் திமுகவிற்காக பிரச்சாரம் செய்யவேண்டிய சூழலுக்கு உள்ளானார் நடிகர் வடிவேலு.
அந்த தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது அதிமுக ஆட்சியை கைப்பற்றியது அக்கட்சியுடன் தேர்தல் உடன்பாடு கொண்டிருந்த விஜயகாந்தின் தேமுதிக சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த்தை திட்டியதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு எதிரானவராக வடிவேல் ஜெயலலிதாவிடம் சித்தரிக்கப்பட்டார் இதனால் வடிவேலை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயக்கம் காட்டிவடிவேலுவை ஓரங்கட்ட அதிமுக தலைமையின் மறைமுக அழுத்தமே காரணம் என்பது திரையுலகில் அனைவருக்கும் தெரியும்
இந்த சூழ்நிலையில் திமுக ஆதரவு தயாரிப்பாளர்கள் கூட வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயங்கினார்கள் காரணம் ஆளுங்கட்சியால் பட வெளியீட்டின் போது பிரச்சினைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற பயம்
 ஆளும் கட்சியாக அதிமுக 10 ஆண்டுகள் ஆண்ட நிலையில் வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்புகள் சுத்தமாக வரவில்லை.
வடிவேலுவின் இடத்தை இவர் நிரப்புவார், அவர் நிரப்புவார் என்று பல ஆருடங்கள் சொல்லப்பட்டன. ஆனால் கடைசி வரையில் வடிவேலுவின் அந்த சிம்மாசனம் அவர் இன்றி இன்றுவரைகாலியாகவே இருந்து வருகிறது
2011 க்கு பின் கடந்த பத்து ஆண்டுகளில் 2012ல் மறுபடியும் ஒரு காதல், 2014ல்தெனாலிராமன், எலி, 2017ல்மெர்சல் என நான்கு படங்களில் மட்டுமே வடிவேல் நடித்திருக்கிறார் இதில் இரண்டு படங்கள் அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் கடந்த 10 வருடங்களில் வடிவேலு சுமார் 300 படங்களில் நடிக்கும் வாய்ப்பை அரசியல் அழுத்தம் காரணமாக இழந்திருக்கிறார்
தமிழ் திரையுலகம் வடிவேலுவை கலைஞனாக பார்க்காமல் ஜெயலலிதாவுக்கு வேண்டாதவர் அதனால் நமக்கு ஏன் வம்பு என்று அவரை ஒதுக்கிவைத்ததால் தமிழ்சினிமாவுக்பெரும் நஷ்டம் என்பதை புறந்தள்ளிவிட முடியாது
விஜயகாந்த் 2011 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்கிற கோபத்தில் அவருக்கு எதிரான பிரச்சாரத்துக்கு வடிவேலுவை தமிழகம் முழுவதும் தேர்தல்பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டது அவருக்கு பாதிப்பு ஏற்பட்ட போது அவருக்கு எந்த வகையிலும் உதவவில்லை அதனால் மனம் வெறுத்துப்போன வடிவேல் சினிமா தொடர்புகளை துண்டித்துக்கொண்டு தனிமையை நாடினார் அரசியல் பேச்சுக்களை தவிர்த்தார் 20 21 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகவோ அதிமுகவுக்கு எதிராகவோ பிரச்சாரம் செய்யவில்லை
ஜெயலலிதா மறைவுக்கு பின் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது படத்தின் பணிகள் துவங்கியது முதலே இயக்குனர் சிம்புதேவனுக்கும்வடிவேலுக்கு மிடையே பனிப்போர் துவங்கியது, திரைப்படத்திற்கு இம்சை அரசன் ஆன வடிவேலு படத்தின் ஆடை வடிவமைப்பாளர் வழங்கும் ஆடைகளை ஏற்க மறுப்பதாக புகார் எழுந்தது.சிம்புதேவன் சொன்ன காட்சிகளில் வடிவேலுவுக்கு சம்மதம் இல்லாததால் தொடர்ந்து படத்தின் திரைக்கதையில் மாற்றம் கோரிய வடிவேலுவால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை
படத்திற்காக செட் அமைத்து பணிகள் துவங்கிய நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்காமல் வடிவேலு நாட்களை வீணடிக்க தயாரிப்பாளர் ஷங்கர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார் சங்கம் மேற்கொண்ட சமரச முடிவுகளை ஏற்க மறுத்து வடிவேலு முரண்டுபிடித்தார் அதன் காரணமாக புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடை விதித்தது சங்கம்
வடிவேல்பற்றிய சர்ச்சைகள் இதுபோல் தொடர்ந்து கொண்டே இருக்க,
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வில் வடிவேலு கலந்து கொண்டு பேசி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்
உடல் மெலிந்து காணப்பட்ட இவர், ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற’சேராத இடம் சேர்த்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என கனத்த குரலில் பாடி, சோகத்தை வெளிப்படுத்தியதோடு கண் கலங்கி அழுதிருக்கிறார்
மேலும் நீங்கள் எல்லாம் ஒரு வருடம் தானே லாக் டவுனில் இருக்கிறீர்கள் நான் 10 வருடமாக லாக் டவுனில் இருக்கிறேன் வீட்டிலேயே முடங்கி கிடப்பது எவ்வளவு ரணம் தெரியுமா என உருக்கமாக பேசினார்.
இப்போதும் என்னுடைய உடலில் தெம்பு இருக்கிறது, நடிக்க ஆசையும் இருக்கிறது, ஆனால் யாரும் வாய்ப்புக்கொடுப்பதில்லை என கலங்கினார்இதைத்தொடர்ந்து வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என அவருக்கு ஆதரவு குரல்கள் கூடியது.
இதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில், காமெடி ஹீரோ ஒருவரின் படத்தில்… மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
எம்டன் மகன் படத்தின் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தான் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். இந்த படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த  நிலையில்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று காலை நடிகர் வடிவேலு சந்தித்துகொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய்5 லட்சத்தை வழங்கினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  விரைவில் நல்லதே நடக்கும். நம்புங்கள். தமிழ்நாடு முதல்வரை சந்தித்தது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.சந்தோசம் தருகிறது. அவரை மரியாதை நிமித்தமாக பார்த்தேன். அவர் மிகவும் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரின் செயல்பாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. உலகமே பாராட்டும் வகையிலும், கவனிக்கும் வகையிலும் கொரோனா பரவலை ஸ்டாலின் கட்டுப்படுத்தி இருக்கிறார் என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்
வடிவேலுவின் இந்த பேட்டி அவரின் திரையுலக மறுபிரவேசம் குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது..இது சம்பந்தமாக திரையுலக வட்டாரங்களில் விசாரித்தபோது தனது தனித்துவமிக்க நடிப்பால் மக்கள் மனங்களில் இடம் பெற்ற வடிவேல்தான் கடந்துவந்த பாதையை மறந்து ஆடிய ஆட்டம் அவரை பத்தாண்டுகள் வனவாசத்திற்கு அனுப்பியது அதற்கு அரசியல் காரணமாக அமைந்துவிட்டது
வடிவேல் இடம் இன்றளவும் நிரப்பபடாமல் காலியாகவே உள்ளது இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் பழைய பந்தாவுடன்தான் சொல்வதை இயக்குநர் கேட்க வேண்டும் என்கிற மனோநிலையில் சிம்புதேவனை கையாள முயற்சித்தன் காரணமாக அந்தப் படம் தடைப்பட்டது. இயக்குநர்களின் நடிகராக
இருந்துவிட்டால் எந்த பிரச்சினையும் வராது அவர்களும் வெற்றிபெறவேண்டும் என்று தான் படங்களை இயக்குகிறார்கள் அவர்களிடம் நான் யார் தெரியுமா என்கிற மனோநிலையில் அணுகுகிறபோது தான் பிரச்சினை ஏற்பட்டு படங்கள் முடங்கிபோகிறது இதில் முதன்மையாவைராக வடிவேல் எப்போதும் இருந்திருக்கிறார்
எந்த அரசியலால் வடிவேலு பத்தாண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டாரோ அதே அரசியல் மாற்றம் அவருக்கான திரைக்கதவை திறந்துவிட்டிருக்கிறது சம்பள விஷயங்களில் அவர் உச்சத்தில் இருந்த போது தயாரிப்பாளர்களை கதறவிட்டார் அந்த நிலையில் இருந்து வடிவேல் மாறி இன்றைய சினிமா நிலவரங்களுக்கு ஏற்ப சம்பளம் வாங்குகிற சூழலுக்கு உட்படுத்திக்கொண்டால் இரண்டாம் ஆட்டத்தில்வடிவேல் கொடி கோடம்பாக்கத்தில் உயர பறப்பதற்கு வழிவகுக்கும் எல்லாம் வடிவேல் கையில்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here