இவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக இசைப் பாடகியும் ஆவார். பின்னாளில் பிரபலமான நடிகை வைஜெயந்திமாலாவின் தாயார் -என்றுகுறிப்பிட்டார்கள்திருவல் லிக்கேணி வேதவல்லி’ -இதுதான் வசுந்தரா தேவியின் நிஜப் பெயர்
மறக்க முடியாத ‘ஜெமினியின் மங்கம்மா சபதம்’ மூலம் ‘வசுந்தரா தேவி’யாக அழியாப் புகழ் பெற்றவர் வேதவல்லி.
கேட்பவரை வசீகரிக்கும் குரலும் இளமை எழிலும் வசுந்தராவின் பிறவிப் பெருமிதம்!கண்ணனிடம் மீராவுக்கு ஏற்படும் அளவு கடந்த அன்பையும், அதனால் உண்டாகும் அத்தனை அவஸ்தைகளையும், கேட்பவர் நெஞ்சுருக சொந்த சாஹித்யத்தில் பாடி, வசனம் பேசி குரல் மூலமாகவே ஒவ்வொன்றுக்கும் உயிரூட்டி, உண்மையான மீராவாகவே உலா வந்தவர் வசுந்தரா தேவி.‘மீரா- ஒலிச்சித்திரம்’ கிராம ஃபோன் இசைத் தட்டுகளாக வெளியாகி விற்பனையில் உச்சம் தொட்டது. ஏறத்தாழ 40 நிமிடங்களை நெருங்கி ஓடிய அவை கலா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.
‘யார் அந்த மீரா…? வெண்ணையையும் உருக்கும் சாரீரம்..! ’ என்று மயங்கி நின்றனர் சங்கீத சாம்ராட்களும் சாஹித்யகர்த்தாக்களும்.
மைசூர் – மண்டயம் என்கிற ஊரைப் பூர்வீகமாக உடையது வசுந்தராவின் வைணவக் குடும்பம். வேலை நிமித்தம் அன்றையமதராஸில் குடியேறியது.ஸ்ரீமதி பரிணயம், மைனர் ராஜாமணி, விஷ்ணு லீலா, அதிர்ஷ்டம், பாலாமணி… படங்களில் நடித்தவர் எம்.என். ஸ்ரீநிவாசன். அவரது மனைவி யதுகிரி. மகள் – வசுந்தரா என அறியப்பட்ட வேதவல்லி.
வசுந்தராவைத் தேடி சினிமா வாய்ப்புகள் வாசலில் நின்றன. சொர்க்கத்தின் கதவைத் திறக்கக் கணவரின் அனுமதி வேண்டுமே…
வேதவல்லி மீராவாகும் முன்னரே எம்.டி. ராமனின் ‘திருமதி’ ஆனவர்.
ராமன் மதராஸ் ராஜதானியின் கவுரவம் மிக்க மராமத்து இலாகா டிராஃப்ட்ஸ்மென். மு.கருணாநிதியால் பொதுப்பணித்துறை என்று பின்னாளில் தமிழ்ப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்.
ராமனின் மனைவி வேதவல்லியாக மருமகள் இருந்தால் போதும். வசுந்தராவாக மாற வேண்டாம் என்று கண்டித்துக் கூறியது புகுந்தவீடு.
எம்.கே. தியாகராஜபாகவதர் நடித்த ‘சிந்தாமணி’அழியாப் புகழ் பெற்றது. அதனை உருவாக்கியவர் ஓய்.வி. ராவ். நடிகை லட்சுமியின் தந்தைராவ், வசுந்தராவை சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் செய்தார். அம்மா யதுகிரிக்குக் கூடுதல் ஆசை. மகளை வெள்ளித் திரையில் கலையரசியாகக் காண.
தாயார் கொடுத்தத் தைரியம். வசுந்தரா, ராவிடம் நடிக்கச் சம்மதம் என்று தலை அசைத்தார்.
சில தினங்களில் ‘வசுந்தராதேவி நடிக்கும் பக்த மீரா தயாராகிறது!’ என்கிற விளம்பரம் வெளியானது. மதராஸப் பட்டினம் கிறுகிறுத்துப் போனது.ராமன் இல்லத்தார் கொந்தளித்தார்கள். வேதவல்லி நடிக்க 144 விழுந்தது.ஓய். வி. ராவ் பின் வாங்கவில்லை. மானப் பிரச்சனை. வேறு யுவதிக்கு வசுந்தராதேவி என்று பெயர் சூட்டி பக்த மீராவை 1938ல் வெளியிட்டார். நிஜமான வசுந்தரா இல்லாமல் நஷ்டம் நேர்ந்தது.
அதே சமயம் மதராஸ் சங்கீத வித்வத் சபை. வசுந்தராவின் ஆலாபனையில் மயங்கிக் கிடந்தது. முக்கிய விருந்தினர் மைசூர் இளவரசர். வசுந்தரா தன் தர்பாரில் பாட வேண்டும் என்று விரும்பினார்.
மைசூர் அரண்மனையில் வசுந்தரா வாய்ஸ்…!
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடியது.
அரியணைகளின் அழைப்பை அலட்சியப்படுத்த முடியுமா..?
மகாராஜா -‘நால்வடி கிருஷ்ண ராஜ உடையார்’, யுவராஜாவின் ரசிப்புத் தன்மைக்கு சபாஷ் போட்டார். வசுந்தராவின் குரல் இருவரையும் கலக்கி விட்டது.
இரு கச்சேரிகளில் இசை மழை பொழிந்த வசுந்தராதேவியை மெச்சி ராஜாங்கப் பரிசுகளும், பாராட்டும் குவிந்தன.
இளைய பூபதி கலைக் குழுவினரோடு உலகச் சுற்றுலாவுக்குக் கிளம்பினார். கான சரஸ்வதி வசுந்தராதேவி உடன் வந்தால் தினம் குயிலும் கூவுமே. உற்சாகம் கூடுமே…
குதூகலமாகி கோகிலத்துக்கு அழைப்பு விடுத்தார்.
Related Posts
மண்ணாளும் மைந்தனுடன் பாரெங்கும் செல்வது பாக்கியம்!
21 வயதிலேயே வசுந்தராவுக்குக் கிடைத்திருக்கும் ராஜமரியாதை யாருக்குச் கிடைக்கும்அன்னை யதுகிரியின் உச்சி குளிர்ந்தது.
ஆறு வயது பேத்தி வைஜெயந்திக்கும் சேர்த்து, பட்டுப்பாவாடை, ரவிக்கைகள் தைக்கக் கொடுத்தார் யதுகிரி.
அரண்மனை சிநேகிதம் சம்சார வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தியது. வீட்டுப் பெண்கள் தூர தேசம் செல்வதில் தர்ம சங்கடம். தயக்கம். குழப்பம். வேட்டிகள் செய்வதறியாது விலகி வழி விட்டன.
பாட்டி, அம்மா, பேத்தி என மூன்று தலைமுறையினரின் முதல் கலைப் பயணம் இளவரசரோடு இனிது தொடங்கியது.
1939 ஜூலை 13. பம்பாய் துறைமுகத்தில் கோலாகலமாக யுவராஜாவின் கப்பல் புறப்பட்டது.
இத்தாலி, வாடிகன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து எல்லாவற்றையும் கப்பலிலேயே கடந்தனர்.வசுந்தராவின் குரல் உப்புக் காற்றையும் இனிக்கச் செய்தது. ஓய்வற்ற இசைக் கச்சேரிகளைக் கேட்டு, யுவராஜாவின் பொன்னான பொழுது புதிதாகக் கழிந்தது.
இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் வரையில் திகட்டாமல் அவர்களின் பிரயாணம் தொடர்ந்தது.
சிற்றரசருடனான ‘ஐரோப்பிய விஜயம்’ குறித்து, சிறப்பு மலர் வெளியானது. அதில் திருமதி வசுந்தரா ராமனின் கட்டுரையும், வசுந்தரா – வைஜெயந்தி மாலா இருவரின் நிழற்படங்களும் இடம் பெற்றன.சினிமா விடாது துரத்தியது வசுந்தராவை. ராமனின் சுற்றத்தார் இம்முறையும் எதிர்த்தனர். அம்மா யதுகிரி வீரியத்துடன் பெண்ணுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.
‘ரிஷ்யசிங்கர்’ படம் மூலம் பெருமையுடன் வசுந்தராதேவியை வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு டாக்கீஸ். இயக்கம் ஆச்சார்யா.
முதன் முதலாக ஹீரோ வேடம் ஏற்றார் ரஞ்சன். 1941 ஆகஸ்டு 2ல் ரிலிசானது.ரிஷ்யசிங்கரை மயக்கும் ‘ராஜநர்த்தகி’யாக வசுந்தரா…! ரஞ்சனுக்கு வீசிய மோக வலையில் வயது வித்தியாசமின்றி சகலரும் வீழ்ந்தார்கள்.சினிமாவில் போதிய முன் அனுபவம், நாடகப் பின்புலம் ஏதுமின்றி திறமையின் ஏணியில் வசுந்தரா பிரகாசித்தார்.
‘சிறிதும் கவலைப்படாதே’ என்று கரகரப்ரியா ராகத்தில் காதலாகப் பாடி, கவர்ச்சியாக ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்.1943ல் தமிழகத்தின் தலைநகரில் ஜப்பான் குண்டு வீச்சு. உயிர் பயத்தில் சொந்த ஊருக்குத் தஞ்சம் புகுந்தனர் மதராஸிகள்.
மங்கம்மா சபதம்ஓடிய தியேட்டர்களில் மாத்திரம், ஒட்டு மொத்த ஜனங்களையும் ஒரே கூரையின் கீழ் ஜீவனோடு பார்க்க முடிந்தது.
நாயகன் – அழகிகளை அடிமைப்படுத்தி ஆனந்தம் காணும் அயோக்கியன். மங்கம்மாவுக்கும் வலுக்கட்டாயமாக மாலையிடுகிறான்.தேகம் தீண்டாமலே உன்னை வாழாவெட்டியாக்குகிறேன்’ என்று கொடூரமாகக் கொக்கரிக்கிறான்.
உன் மூலமாகவே ஒரு மகனைப் பெற்றுப் பழி தீர்க்கிறேன்’ என்று மங்கம்மா சத்தியம் செய்கிறாள். அதில் வெற்றியும் காண்கிறாள்.
நயவஞ்சகத் தந்தையாகவும், நல்ல மகனாகவும் இரு வேடங்களில் ரஞ்சன் ரசிகர்களைக் கவர்ந்தார்.
யுத்த பேரிகைகள் இடை விடாமல் முழங்கிய நெருக்கடி. ‘மங்கம்மா – வசுந்தராதேவி’ யின் நவரஸ பாவனைகளே தமிழர்களுக்கு ஒரே டானிக்!
‘ஐயய்யய்யே… சொல்ல வெட்கமாகுதே’ என்கிற பாடலில் வசுந்தராவின் ஆட்டம் வெகு ஜோராக இருந்ததாம். இளசுகளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியதாம்.
வசுந்தரா, மற்றும் தமிழ் சினிமாவின் அந்தஸ்தை எவரெஸ்ட்டுக்கு கொண்டு சென்றது ஜெமினியின் மங்கம்மா சபதம்.அந்த ஒரே படத்தின் மூலம் வசுந்தரா அன்று அடைந்த உச்சக்கட்டப் புகழை, மற்றப் பிரபலங்கள் நெருங்கப் பல ஆண்டுகள் பிடித்தது.
வசுந்தராவின் நடிப்பில் 1946ல் உதயணன்-வாசவதத்தை, 1949ல் ‘நாட்டியராணி’ போன்று ஓரிரு படங்கள் வெளி வந்தன.
கணவரோடு ஏற்பட்டக் கருத்து வேறுபாடுகள் பிரிவை உண்டாக்கின
தீபாவளி’ என்ற பெயரில் சொந்தப்படம் தயாரிக்கத் தொடங்கினார் வசுந்தரா. அதன் ஷூட்டிங்குக்காக அடிக்கடி பம்பாய் பயணம் வேறு.அதைப் பயன்படுத்திக் கொண்டனர் மாமியார் யதுகிரியும், மாப்பிள்ளை எம்.டி. ராமனும். மகள் வைஜெயந்தி மாலாவைத் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்.வைஜெயந்தி மாலா குறித்த வழக்கு கோர்ட்டுக்குப் போனது. 1950 செப்டம்பர் 20.
மகளுக்கு கார்டியன் தந்தை எம்.டி. ராமன் ’ என்று, தீர்ப்பு யதுகிரி பாட்டிக்குச் சாதகமாக வந்தது.
பெற்ற குழந்தையை உயிரோடு பிரிய வேண்டிய வேதனை வசுந்தராவுக்கு. விளைவு அவரைத் திரையில் காண முடியாமல் போனது.இந்த சோகத்திலேயே இருந்த அவர் இதே நாளில் காலமானார்.