சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் வீடியோ

0
35
தேவதைக் கதைகளில் எழுத்தாளர்களால் கையாளப்படும் பெயர் ‘சிண்ட்ரெல்லா’ . இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில்  படம் உருவாகி இருக்கிறது.
ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை
வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இயக்குனர் எஸ் .ஜே .சூர்யாவிடம் உதவியாளராக பணிபுரிந்து சினிமா கற்றவர்.
இந்தப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை  இயக்குநர்
எஸ் .ஜே. சூர்யா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
 இந்த வீடியோ காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே ஷாட்டில் படமாகி காட்சி வெளியாவது தமிழ் சினிமாவில்இதுவே முதல் முறையாகும்.
இதுபற்றி இயக்குநர் வெங்கடேஷ் கூறியபோது
இப்போது சாதாரணமாக எல்லாரும் ‘ஸ்னீக் பீக்’ கள் வெளியிடுகிறார்கள். நாம் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று ஒரே ஷாட்டில் எடுக்க முயற்சி செய்தோம். அதில்  வெற்றியும் பெற்றோம். இக்காட்சி அப்படியே படத்தில்  வருகிறது. ராய்லட்சுமி ஆடைகளை களைந்து விட்டு ஓடுவது போலவும் களையப்பட்ட அந்த ஆடை  அமானுஷ்யமாக எழுந்து அசைந்து  சுழன்று வருவது போலவும் வரும்  இதை நாங்கள் ஒரே ஷாட்டில் எடுத்தோம். இந்த முயற்சியை  இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மிகவும் ரசித்துப் பாராட்டினார். ஸ்னீக் பீக்கைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தினார்” என்றார்.
படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறுகிற போது,
இது ஒரு பேய்ப் படம் தான் .ஆனால் பேய்ப் படங்களுக்கான வழக்கமான பாணியில் இருந்து விலகி ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது .ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள  இமேஜை உடைக்கும் படி இருக்கும்.அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் மாற்றம் கொண்டதாக இருக்கும். நல்ல நடிப்பில் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும் .
சாக்க்ஷி அகர்வால்  ஏற்றுள்ள வில்லி பாத்திரம் யாரும் எதிர்பாராத பரபரப்புடன் இருக்கும்.” என்கிறார்.
இவர்கள் தவிர ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத் , பாடகி உஜ்ஜயினி ,கஜராஜ், மற்றும் பலர்  நடித்திருக்கிறார்கள்.விரைவில் ‘சிண்ட்ரெல்லா ‘ வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here